உங்க பார்ட்னருடன் மகிழ்ச்சியா இருக்க இதெல்லாம் ஃபாலோ பண்ணுங்க

By Gowthami Subramani
23 Apr 2024, 21:08 IST

மகிழ்ச்சியான உறவு நீண்ட கால ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். இதில் வாழ்க்கையில் சிறிய விஷயங்களிலும் அக்கறை தேவைப்படும். கணவன், மனைவி உறவை ஆரோக்கியமாக வைக்க என்ன வழிகள் என்பதைக் காண்போம்

சுய பாதுகாப்பு

உறவுகள் என்பது தனிநபர்களாக இருவரும் கொண்டிருக்கும் ஒருங்கிணைந்த மகிழ்ச்சியைக் குறிப்பதாகும். எனவே உறவு செயல்பாட்டிற்கு சுய கவனிப்பு முக்கியமானதாகும்

உறவை மதிப்பது

மகிழ்ச்சியான தம்பதிகள் தங்கள் வேறு யாருடனும் ஒப்பிடக்கூடாது. ஒவ்வொரு உறவும் அதன் தனித்துவ பயணத்தால் மாறுபட்டதாகும். எந்த காலகட்டத்திலும் ஒன்றாக வேலை செய்வது ஓற்றுமையை பலப்படுத்துகிறது

பாராட்டுவது

துணையை பாராட்டுவது மகிழ்ச்சியான உறவின் திறவுகோலாக அமைகிறது. இது நேர்மறையான எண்ணங்களைக் காட்டுகிறது. இது வாழ்க்கையில் அவர்கள் கொண்டு வரும் வித்தியாசத்தை கவனத்தில் கொண்டு ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும்

நெருக்கம்

நெருக்கம் என்பது உடல் சார்ந்தது மட்டுமல்ல. இது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பினும், கவலைகள், சோகம், கனவுகள் குறித்த வெளிப்படையான தன்மைகள் அனைத்தும் சமமாக முக்கியமானவையாகும்

கவனமாகக் கேட்பது

கூட்டாளியின் கருத்துகள் மற்றும் கவலைகளுக்கு எப்போதும் உடனிருந்து கேட்க வேண்டும். கவலைகள் மற்றும் கருத்துக்களுக்கு ஏற்ப அவர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்

ஏற்றுக் கொள்ளுதல்

ஆரோக்கியமான உறவிற்கு அடித்தளமாக இருப்பது, தங்களைத் தாங்களே மன்னிக்காமல் இருக்க அனுமதிப்பதாகும். இதில் கூட்டாளரை மாற்ற முயற்சிப்பதற்குப் பதில் முழு ஆதரவையும் அவர்களுக்கு வழங்க வேண்டும்

நேரம் ஒதுக்குவது

பிஸியான கால அட்டவணைகளால் ஒருவருக்கொருவர் நேரத்தை ஒதுக்க மறக்க விடுகிறோம். இது பெரும்பாலான நேரங்களில் இருவரையும் பிரிப்பதற்கான காரணியாக மாறுகிறது. எனவே இருவரும் நேரம் ஒதுக்கி பேசிக் கொள்வது நல்லது