வாழ்க்கையில் வெற்றி பெற தினமும் இத செஞ்சா மட்டும் போதும்

By Gowthami Subramani
14 May 2024, 17:30 IST

வெற்றி பெறுவது அன்றாட பழக்க வழக்கங்களில் கட்டமைக்கப்படுகிறது. இதற்கு நேர்மறையான எண்ணங்களை வளர்ப்பதன் மூலம் தனிநபர்கள் தங்களது வாழ்க்கையில் சாதனைகளை படைக்கலாம். வெற்றி பெற அன்றாட பழக்க வழக்கங்களில் கொண்டு வரப்படும் மாற்றங்கள் என்னன்ன?

முன்கூட்டியே திட்டமிடுதல்

ஒவ்வொரு இரவும் அடுத்த நாள் என்ன செய்யலாம் என்பதைத் திட்டமிட வேண்டும். இதன் மூலம் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கவும், முக்கிய செயல்களுக்கு நேரத்தை ஒதுக்கவும், தெளிவாகவும் இருக்க அனுமதிக்கிறது

காலை பழக்கங்கள்

தியானம், உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்வது போன்ற சீரான காலை பழக்கங்கள் ஆற்றல் அளவை அதிகரிக்கிறது. மேலும் கவனத்தை அதிகரித்து, ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்த உதவுகிறது

80/20 விதி

80/20 விதியின் அடிப்படையில் செயல்பாடு மற்றும் பணிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதாவது 20% முயற்சிகளிலிருந்து 80% முடிவுகளைப் பெற வேண்டும். இந்த விதியின் அடிப்படையில் பணி செய்வது அதிக உற்பத்தித் திறனை குறைந்த முயற்சியில் பெறலாம்

உடனடியாக செய்தல்

5 நிமிடங்கள் அல்லது அதற்கும் குறைவான நேரத்தில் செய்து முடிக்கக் கூடிய வேலைகளை உடனடியாக செய்து முடிக்க வேண்டும். இதன் மூலம் பணி குவிந்து கிடப்பதைத் தவிர்க்கலாம் மற்றும் உற்பத்தித் திறனை ஊக்குவிக்கலாம்

போதுமான ஓய்வு பெறுவது

உடல் மற்றும் மன ஆரோக்கியம், மனத்தெளிவு, ஒட்டுமொத்த உற்பத்தித் திறனுக்கும் போதுமான உறக்கம் அவசியமாகும். உடல் மற்றும் மன ஆற்றலைப் பெற இரவு தோறும் போதுமான ஓய்வு பெறுவது உறுதி செய்து கொள்ள வேண்டும். இது உற்சாகத்தையும், புத்துணர்ச்சியையும் அளிக்கிறது