அன்றாட வாழ்வில் செய்யக் கூடிய சுய பாதுகாப்பு நடவடிக்கைகள்

By Gowthami Subramani
24 Jul 2024, 09:00 IST

சுய பாதுகாப்பு என்பது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் செயல்களை செய்வதற்கு நேரம் ஒதுக்குதல் ஆகும். இதில் என்னென்ன சுய பாதுகாப்பு முறைகளை மேற்கொள்ளலாம் என்பதைக் காண்போம்

வழக்கமான உடற்பயிற்சி

தினமும் 30 நிமிட நடைப்பயிற்சி செய்வது மனநிலையை மேம்படுத்தி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது உடல் ஆரோக்கியத்திற்கு உதவுவதுடன், மன ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது

ஆரோக்கியமான உணவு

சமச்சீரான உணவுடன் நாள் முழுவதும் நீரேற்றமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இது உடல் ஆற்றலை மேம்படுத்தி நாள் முழுவதும் கவனம் செலுத்த உதவும். மேலும், காஃபின் மற்றும் ஆல்கஹால் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்

நிதானமான செயல்

தியானம், தசை தளர்வு அல்லது சுவாசப் பயிற்சிகள் போன்றவற்றை மேற்கொள்ளலாம். மேலும் இசையைக் கேட்பது, படிப்பது, இயற்கையில் நேரத்தைச் செலவிடுவது போன்றவற்றின் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்கலாம்

சீரான தூக்கம்

நல்ல, சீரான தூக்கத்தைப் பெறுவதன் மூலம் நாள் முழுவதும் தேவையான ஆற்றலைப் பெற முடியும். எனவே டிவி, செல்போன் போன்ற திரைகளிலிருந்து விலகி ஆரோக்கியமான தூக்கத்தைப் பெற வேண்டும்

இலக்குகள் அமைத்தல்

வாழ்க்கையில் குறுகிய மற்றும் நீண்ட கால இலக்குகள் அமைப்பது முன்னேற்றத்திற்கான சிறந்த தேர்வாக அமைகிறது. இது சுய மரியாதை மற்றும் மதிப்பை மேம்படுத்தும்

நேர்மறையில் கவனம் செலுத்துதல்

எதிர்மறை மற்றும் உதவாத எண்ணங்களை அடையாளம் கண்டு அவற்றைத் தவிர்த்து, நேர்மறை எண்ணங்களின் மீது கவனம் செலுத்த வேண்டும்