ஐஸ் குளியல் கடந்த சில ஆண்டுகளாகவே ட்ரெண்டிங்கில் உள்ளது. ஐஸ் தண்ணீரில் குளிப்பதற்கு எல்லோரும் விரும்புகின்றனர். இதில் ஐஸ் குளியலில் ஈடுபடுவதால் நமக்குக் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் சிலவற்றைக் காணலாம்
வீக்கத்தைக் குறைப்பதற்கு
குளிர்ந்த நீரில் குளியல் செய்வது உடற்பயிற்சிக்குப் பிறகு ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. இது விரைவாக குணமடைய உதவுகிறது
நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்த
ஐஸ் குளியல் தூக்கத்தை மேம்படுத்துவதன் மூலம் மத்திய நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்த உதவுகிறது. இது சோர்வைக் குறைத்து நம்மை நன்றாக உணர வைக்கிறது
தசை வலியைக் குறைக்க
ஆய்வுகளின் படி, ஐஸ் குளியலின் மிகப்பெரிய நன்மைகளில் ஒன்றாக தசை வலியைக் குறைக்க உதவுகிறது. இது உடலை நன்றாக உணர வைக்கிறது. தீவிரமான உடற்பயிற்சிக்குப் பிறகு ஐஸ் குளியல் எடுப்பது உடல் தசைகளை விடுவிக்கிறது
வேகஸ் நரம்பை பலப்படுத்த
குளிர் வெளிப்பாடு ஆனது வேகஸ் நரம்பை பயிற்றுவிக்க உதவுகிறது. இது உடலை அமைதிப்படுத்துவதற்கும், மன அழுத்தத்தைக் குறைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது
வெப்பமான காலநிலையில் உதவ
சூடாகவோ அல்லது ஈரப்பதமாகவோ இருக்கும் காலகட்டத்தில், ஐஸ் குளியல் எடுப்பது உடலைக் குளிர்விக்க உதவுகிறது. இது சிறப்பாக செயல்பட உதவுகிறது