புகைபிடிப்பதைத் தவிர்க்க முடியலயா? இந்த ஃபாலோ பண்ணுங்க

By Gowthami Subramani
31 May 2024, 13:30 IST

புகைபிடிப்பது உடல் நலத்திற்குக் கேடு தரும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. எனினும், புகைப் பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களால், இதை எளிதில் கைவிட முடிவதில்லை. இதில் புகைபிடித்தலை தவிர்க்க உதவும் வழிகளைக் காணலாம்

தூண்டுதல்களைத் தவிர்ப்பது

புகைபிடிக்கும் பழக்கத்தைத் தவிர்க்கும் முன் புகைபிடிப்பதற்கான சூழல் அல்லது தூண்டுதல்களைக் கண்டறிய வேண்டும். மன அழுத்தம் இருக்கும் போது, புகைபிடிப்பவர்களுடன் இருக்கும் போது, புகைபிடிக்க வேண்டும் என்ற தூண்டுதல் இருக்கலாம். இந்த தூண்டுதல்களைக் கண்டறிந்து தவிர்க்க வேண்டும்

நிக்கோட்டின் மாற்று சிகிச்சை

நிக்கோட்டின் மாற்று சிகிச்சை எடுத்துக் கொள்வது புகையிலையின் மீதான ஆசையைத் தவிர்க்கிறது. இதற்கு நிக்கோட்டின் கம், நிக்கோட்டின் திட்டுகள் அல்லது நிக்கோட்டின் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்

உடல் செயல்பாட்டில் ஈடுபடுவது

உடற்பயிற்சி செய்யும் போது உடலிலிருந்து என்டோர்ஃபின்கள் வெளியேறுகிறது. சுறுசுறுப்பாக இருப்பதன் மூலம் புகையிலையின் மீதுள்ள மோகத்தை குறைக்கலாம். இது மன அழுத்தத்தைக் குறைத்து, மனநிலையை மேம்படுத்த உதவுகிறது

தளர்வான பயிற்சிகளில் ஈடுபடுதல்

உடல் மற்றும் மனதை தளர்வாக வைப்பதற்கு தியானம் அல்லது சுவாசப் பயிற்சி அல்லது யோகா போன்ற பயிற்சிகளில் ஈடுபடலாம். இது மன அழுத்தத்தைக் குறைத்து சோர்வைக் குறைக்கிறது. இது புகையிலையின் மீதான நாட்டத்தைக் குறைக்கிறது

ஊக்கமளிப்பது

புகைபிடிக்கும் எண்ணம் வரும் போது உணவகம் சென்று விரும்பும் உணவை சாப்பிடுவது, சுற்றுலா தளம் செல்லுதல், திரைப்படத்திற்குச் செல்வது போன்றவற்றைச் செய்யலாம். இது புகைபிடிப்பதன் நாட்டத்தைத் தவிர்க்கிறது