நிராகரிப்பைக் கையாள குழந்தைகளுக்கு கற்று தரும் எளிய குறிப்புகள்!

By Kanimozhi Pannerselvam
26 Feb 2024, 09:31 IST

நிராகரிப்பு என்பது வாழ்க்கையின் தவிர்க்க முடியாத பகுதியாகும், அதைச் சமாளிப்பதற்கான சரியான வழியை குழந்தைகளுக்குக் கற்பிப்பது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கடமையாகும்.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒருவகையில் நிராகரிப்பு என்பதை கடந்து வந்தாக வேண்டும். இது தனிப்பட்ட தோல்வியல்ல என்பதை குழந்தைகளுக்கு விளக்கவும், அவர்களின் உணர்வுகளைப் பற்றி வெளிப்படையாக பேசவும் பெற்றோர்கள் உதவ வேண்டும்.

ஒரு விஷயத்தில் நிராகரிக்கப்பட்டு விட்டாலே முற்றிலும் திறமையற்றவர்கள் என்பது கிடையாது என உங்கள் குழந்தைக்கு புரிய வைக்க வேண்டும். அவர்களுடைய தனித்தன்மை மற்றும் நேர்மையான குணங்களைச் சுட்டிக்காட்டி, தன்னம்பிக்கையை அதிகரியுங்கள்.

நிராகரிப்பை எதிர்கொண்டு அதற்கு மேல் உயர்ந்த வெற்றிகரமான நபர்களின் கதைகளைப் பகிரவும். இது குழந்தைகளுக்கு ஊக்கமளிக்கும் மற்றும் தோல்வியில் இருந்து கற்றுக் கொள்ளவும் வளரவும் முடியும் என்பதை அவர்களுக்குக் காண்பிக்கும்.

நிராகரிப்பு வாழ்க்கையின் ஒரு பகுதி என்பதை குழந்தைகளுக்கு விளக்குங்கள். நிராகரிப்பு என்பது வாழ்க்கையின் இயல்பான பகுதியாகும், பலவீனம் அல்லது சுயமரியாதை விஷயமாக கருதக்கூடாது என்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு விளக்க வேண்டும்.