உடல் ஆரோக்கியத்திற்கு இந்த வருஷம் நீங்க எடுக்க வேண்டிய தீர்மானங்கள்.!

By Gowthami Subramani
29 Dec 2023, 16:21 IST

அன்றாட வாழ்வில் ஒரு பகுதியாக சில நல்ல பழக்கங்களைக் கையாள்வதன் மூலம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும். உடல் ஆரோக்கியத்திற்கு புத்தாண்டில் நீங்கள் பின்பற்ற வேண்டிய ஆரோக்கியமான தீர்மானங்கள் சிலவற்றைக் காணலாம்

தீர்மானம் எடுக்க வேண்டுமா?

ஒரு நபருக்கு ஆரோக்கியம் என்பது மிக முக்கியமானது ஆகும். புத்தாண்டு தீர்மானத்தை எடுக்க விரும்புபவர்கள் அன்றாட வழக்கத்தில் சில நல்ல பழக்கங்களைச் சேர்த்துக் கொள்ளலாம். இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்

தினசரி உடற்பயிற்சி

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம். எனவே தினமும் உடற்பயிற்சி செய்வதை வழக்கத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்ய முடியாமல் போனால், குறைந்தது 20-25 நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும்

நீரேற்றமாக இருப்பது

உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் எளிமையான மற்றும் முக்கியமான ஒன்று போதுமான அளவு நீர் குடிப்பதாகும். இதன் மூலம் பல கடுமையான பிரச்சனைகளிலிருந்து உடலைப் பாதுகாக்க முடியும். இது சரும மேம்பாட்டிற்கும் உதவும். இதற்கு தினமும் 8 - 10 கிளாஸ் தண்ணீர் குடிக்கலாம்

மன அழுத்தத்தை தவிர்ப்பது

மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க விரும்புபவர்கள் மன அழுத்தத்தைக் கைவிடுவது நல்லது. அதிகமாக சிந்திப்பது, மன அழுத்தத்துடன் இருப்பது உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்லாமல், மன ஆரோக்கியத்தையும் பாதிக்கலாம். இதற்கு தியானம், யோகா போன்றவற்றை மேற்கொள்ளலாம்

வழக்கமான சோதனைகள்

உடல் ஆரோக்கியத்திற்கு வழக்கமான பரிசோதனயை மேற்கொள்வது நல்லது. இதன் மூலம் எதிர்காலத்தில் எந்த கடுமையான பிரச்சனையிலிருந்தும் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்

போதுமான தூக்கம்

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சரியான நேரத்தில் போதுமான தூக்கம் பெறுவது அவசியம். இதன் மூலம் பல கடுமையான பிரச்சனைகளிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். இது மன அமைதிக்கு உதவும். எனவே தினமும் குறைந்தது 8 மணி நேரம் தூங்குவதை உறுதி செய்ய வேண்டும்

புத்தாண்டில் இந்த தீர்மானங்களை மேற்கொள்வதன் மூலம் உடல் நலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்