குளிர்காலம் வந்து விட்டாலே, கூடவே பலரும் மன அழுத்தத்தைச் சந்திக்கின்றனர். இதில் குளிர்காலத்தில் மனநிலையை உயர்த்தவும், பருவகால மனச்சோர்வு அல்லது மன அழுத்தத்தை சமாளிக்கவும் உதவும் சில குறிப்புகளைக் காணலாம்
ஆரோக்கியமான உணவு
முழு தானியங்கள், ஒல்லியான புரதங்கள் மற்றும் இலை கீரைகள் போன்ற ஆரோக்கியமான உணவுமுறைகளைக் கையாள வேண்டும். மேலும் இனிப்புகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது அவசியம்
சுறுசுறுப்பாக இருப்பது
உடல் செயல்பாடுகள் நல்ல உணர்வு ஹார்மோன்களை வெளியிடுகிறது. ஒரு சிறிய நடைபயிற்சி அல்லது வீட்டு பயிற்சி கூட மனநிலையை மேம்படுத்துகிறது
சூரிய ஒளியைத் தழுவுதல்
குளிர்காலங்களில் வெளியில் நேரத்தை செலவிடுவது மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. எனவே தினமும் குறைந்தது 10-15 நிமிடங்கள் சூரிய ஒளியில் நிற்பது நல்லது
சமூக தொடர்பில் இருப்பது
நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடனான வழக்கமான சமூக தொடர்புகள் உற்சாகத்தை மேம்படுத்துகிறது. இதன் மூலம் தனிமை உணர்வுகளைக் குறைக்கலாம். இதன் மூலம் மனநிலையை மேம்படுத்தலாம்
சீரான தூக்கம்
நாள்தோறும் 7 முதல் 8 மணி நேர இரவு தூகத்தை இலக்காக வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு சீரான தூக்க அட்டவணை மனநிலை மற்றும் ஆற்றல் அளவை மேம்படுத்த உதவுகிறது