சிரிப்பதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

By Kanimozhi Pannerselvam
23 Feb 2024, 13:30 IST

நோயெதிர்ப்பு சக்தி

சிரிப்பது உடலில் அதிக மெலடோனின் உற்பத்தி செய்கிறது, இது மூளையால் வெளியிடப்படும் ஹார்மோன் ஆகும். இது நல்ல தூக்கத்திற்கு உதவும். இதனால் தூக்க முறையும் மேம்படும். மேலும் சிரிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

உட்புற உடற்பயிற்சி

எண்டோர்பின் ஒரு இயற்கை வலி நிவாரணி, இது வலியிலிருந்து விடுபட இது அவசியமானது. இதனை உற்பத்தி செய்ய சிரிப்பு மிக முக்கிய காரணியாக உள்ளது. மேலும் சிரிப்பது என்பது உட்புற உறுப்புகளுக்கான உடற்பயிற்சி என நிபுணர்கள் கூறுகின்றனர்.

சர்க்கரை அளவு

சிரிப்பது இரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது மற்றும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதனால் மாரடைப்பு அல்லது இதயம் தொடர்பான நோய்களைத் தடுக்கலாம். தினமும் வாய் விட்டு சிரிப்பது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

ஆன்டி ஏஜிங்

சிரிப்பு சருமத்திற்கான உடற்பயிற்சியாகும். நீங்கள் ஒவ்வொருமுறை புன்னகைக்கும் போதும், 15 முக தசைகள் இணைந்து செயல்பட வைக்கிறது. இதனால் முகத்தில் இரத்த ஓட்டம் அதிகரிப்பதோடு, விரைவிலேயே வயதான தோற்றம் அடையும் செயல்முறையும் தடுக்கப்படுகிறது.

வலி நிவாரணம்

ஸ்பான்டைலிடிஸ் அல்லது முதுகுவலி போன்ற தாங்க முடியாத வலியைப் போக்க சிரிப்பு உதவுகிறது என்று பல ஆராய்ச்சிகள் கண்டறிந்துள்ளன.

சிரிப்பு தரும் போனஸ்

தினமும் 10 நிமிடம் சிரிப்பது வலிகளில் இருந்து நிவாரணம் பெறவும், 2 மணி நேர ஆழ்ந்த உறக்கத்திற்கு இணையான பலன்களை பெறவும் உதவும் என கண்டறியப்பட்டுள்ளது.