ஜப்பானிய கலாச்சாரம் ஆரோக்கியமான மற்றும் முழுமையான நல்வாழ்வை வலியுறுத்துகிறது. ஜப்பானியர்களின் பழக்க வழக்கங்கள் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க பங்களிக்கிறது. இதில் நாம் கடைபிடிக்க வேண்டிய ஜப்பானிய பழக்க வழக்கங்களைக் காணலாம்
நீட்சிப் பயிற்சி
நாள் முழுவதும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த மற்றும் சுழற்சியை மேம்படுத்தவும் எளிய நீட்சிப் பயிற்சிகளுடன் நாளைத் தொடங்க வேண்டும்
நடைபயிற்சி
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், மனதைத் தெளிவாக வைக்கவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் அன்றாட வழக்கத்தில் நடைபயிற்சி மேற்கொள்ளலாம்
கிரீன் டீ உட்கொள்ளல்
கிரீன் டீ ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த சிறந்த பானமாகும். இது உடல் செயல்பாடுகளை அதிகரித்து வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது
ஆரோக்கியமான காலை உணவு
நாள் முழுக்க ஆரோக்கியமாக இருக்க காலை உணவு நீடித்த ஆற்றல் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாக இருக்க வேண்டும். காய்கறிகள், பழங்கள் போன்ற சமச்சீரான உணவை எடுத்துக் கொள்ளலாம்
கவனமாக சாப்பிடுவது
அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், முழு வயிறு நிரம்பிய உணவை எடுத்துக் கொள்வது உடல் ஆற்றலைக் குறைக்கிறது. எனவே 75% நிரம்பும் வரை சாப்பிட வேண்டும்
வழக்கமான உடல்செயல்பாடு
உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த யோகா அல்லது உடற்பயிற்சி போன்ற செயல்பாடுகளில் ஈடுபடலாம்
சிறு தூக்கம்
ஆற்றல் நிலைகள் மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்தவும் பொது இடங்களில் குட்டித் தூக்கத்தை எடுத்துக் கொள்ளலாம்
மாலை தளர்வு
உடல் தசைகளைத் தளர்த்தி, நிம்மதியான இரவு தூக்கத்தை உறுதிபடுத்த படுக்கைக்கு முன்னதாக சூடான குளியலைத் தேர்வு செய்யலாம்
ஜப்பானியர்களின் இந்த பழக்க வழக்கங்களைக் கையாள்வது, உடல் ஆற்றலை மேம்படுத்தவும், ஆரோக்கியமான நல்வாழ்விற்கும் உதவுகிறது