மூளை ஆரோக்கியத்திற்கு உதவும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள்

By Gowthami Subramani
10 Jul 2024, 09:00 IST

மீன் மற்றும் சில தாவர மூலங்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. இதன் குறிப்பிடத்தக்க அறிவாற்றல் நன்மைகள், மூளை ஆரோக்கியத்தை எவ்வாறு ஆதரிக்கிறது என்பதைக் காணலாம்

மேம்படுத்தப்பட்ட நினைவாற்றல்

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், குறிப்பாக டிஹெச்ஏ, மூளை செல் அமைப்பு மற்றும் செயல்பாட்டைப் பராமரிக்க உதவுகிறது. மேலும் இது நினைவாற்றலை மேம்படுத்தவும் உதவுகிறது

மேம்படுத்தப்பட்ட கவனம்

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் செறிவு மற்றும் கவனத்தை மேம்படுத்த உதவுகிறது. இது கற்றல் மற்றும் உற்பத்திறனுக்கு முக்கியமானவையாகக் கருதப்படுகிறது

அறிவாற்றல் சரிவைக் குறைக்க

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் வழக்கமான உட்கொள்ளல் வயது தொடர்பான அறிவாற்றல் வீழ்ச்சியை மெதுவாக்குகிறது மற்றும் அல்சைமர் நோயின் அபாயத்தைக் குறைக்கிறது

மனநிலை ஒழுங்குமுறைக்கு

இது நரம்பியல் கடத்தியாகச் செயல்பட்டு மனச்சோர்வு மற்றும் பதட்டத்தின் அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது

திறன்களை மேம்படுத்த

ஒமேகா-3 உட்கொள்ளல் குழந்தைகளின் கற்றல் திறன் மற்றும் கல்வி செயல்திறனை மேம்படுத்துவதாகக் கூறப்படுகிறது

மூளை வளர்ச்சி

இளம் வயதினர்கள் மற்றும் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. இது அறிவாற்றல் வளர்ச்சி மற்றும் செயல்பாட்டை ஆதரிக்கிறது

நரம்பியல் பாதுகாப்பு

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மூளையை வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது. இது நரம்பியல் கடத்தல் நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது

மனநல ஆரோக்கியத்திற்கு

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ADHD மற்றும் பிற மனநல நிலைமைகள் உள்ள நபர்களின் மனநிலையை மேம்படுத்த உதவுகிறது