குளிர்காலத்தில் குளிப்பது என்றாலே பலரும் பயன்படுகின்றனர். இதனால் இந்த காலகட்டத்தில் குளிப்பதைத் தவிர்க்கின்றனர். குளிர்காலத்தில் குளிக்காமல் இருப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா? இல்லையா? என்பதைப் பார்ப்போம்
குளிர்கால குளியல் வேண்டுமா?
குளிர்காலத்தில் சில நாள்கள் குளிக்காமல் இருந்தால், பல நன்மைகளைப் பெறலாம். ஆம். குளிர்காலத்தில் குளிப்பது இருப்பதும் உடலுக்கு நன்மை பயக்கும்
நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்க
குளிர்காலத்தில் தினமும் குளிக்காமல் இருப்பது சருமத்தில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அழித்துவிடாது. இது நோயெதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்த உதவுகிறது
உலர் சருமம்
குளிர்ச்சியான காலநிலையில் தினமும் குளிப்பதால் சருமம் வறண்டு போகலாம். இதனால், பல பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன
சூடான நீரைத் தவிர்ப்பது
குளிர்காலத்தில் வெந்நீரை பயன்படுத்துவது உடலில் உள்ள இயற்கையான எண்ணெயை அழித்து விடலாம். இது சருமத்தை சேதமடையச் செய்கிறது. இதற்கு மிகவும் குளிர்ச்சியான அல்லது மிகவும் சூடான நீரைத் தவிர்க்கவும். ஆனால் வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம்
தோல் தொற்றுக்கள்
குளிர்காலத்தில் தினமும் குளிக்காமல் இருப்பதன் மூலம், பல்வேறு கடுமையான தோல் நோய்த்தொற்றுக்களுக்கு ஆளாகாமல் பாதுகாத்துக் கொள்ளலாம். இதன் மூலம் தோலில் பாக்டீரியா வளரும் ஆபத்தைக் குறைக்கிறது
கண்களுக்கு சேதம்
பல ஆய்வுகளின் படி, குளிர்ச்சியான நீரில் குளிப்பது கண்களில் ஈரப்பதத்தைக் குறைக்கிறது. இதனால் கண்களில் லேசான அரிப்பு ஏற்படலாம். இந்த சூழ்நிலையில், குளிக்கும் போது வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்த வேண்டும்
எத்தனை நாள்கள் குளிக்கலாம்?
குளிர்காலத்தில் தினமும் குளிப்பதற்கு பதில், வாரத்திற்கு 3 நாள்கள் குளிக்கலாம். இது பல்வேறு பருவகால நோய்கள் மற்றும் தொற்றுநோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உதவுகிறது
குளிர்காலத்தில் தினமும் குளிப்பதைத் தவிர்ப்பதன் மூலமும், பல்வேறு ஆரோக்கிய நலனைப் பெறலாம்