சிரிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். அதே போல, அழுவுவதும் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதில் அழுவுவதால் கிடைக்கும் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்
நச்சுக்களை வெளியேற்ற
அழுகும் போது வெளியேறும் கண்ணீர் மூலம் உடலில் இருந்து நச்சுப் பொருட்கள் வெளியேற்றப்படுகிறது. இதனால் உடல் நச்சுத்தன்மையற்றதாகிறது
இலகுவான மனதிற்கு
அழுகை மனதை லேசாக்கும் என்று அடிக்கடி சொல்வதைக் கேள்விப்பட்டிருப்போம். உண்மையில் அழுவது மனதின் அடக்கப்பட்ட உணர்ச்சிகளை வெளியிட உதவுகிறது. இது இதயம் மற்றும் மனதின் கனத்தை குறைக்கிறது
சுவாசத்தை மேம்படுத்த
அடிக்கடி அழும் போதும், அழுத பிறகும் நாம் நீண்ட மற்றும் ஆழமான சுவாசத்தை எடுத்துக்கொள்கிறோம். இது உடல் மற்றும் மூளையை ஓய்வெடுக்க வைக்கிறது. இதன் மூலம் உடல், மனம் நிம்மதி அடைகிறது
பார்வை மேம்பாட்டிற்கு
அழுகையானது கண்களின் மேற்பரப்பில் உள்ள செல்களை வலுவாக்குகிறது. மேலும், கண்ணீரில் இருக்கும் தூசிகளை அகற்றவும் உதவுகிறது. இதன் மூலம் கார்னியாவை ஈரப்பதமாகவும் சுத்தமாகவும் வைக்கலாம்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க
அழுகை மன அழுத்தத்தைக் குறைக்கிறது. இது ஆக்ஸிடாஸின் என்ற மகிழ்ச்சியான ஹார்மோனை வெளியிடுகிறது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தவும், பல்வேறு நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது
தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த
உடலிலிருந்து வெளியாகக் கூடிய எண்டோர்பின்கள் மனதை அமைதிப்படுத்த உதவுகிறது. இது நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கும்
மன அழுத்தத்தைக் குறைக்க
அழுவது மன அழுத்த நரம்புகளை குறைக்கவும், ஹார்மோன்களை விடுவிக்கவும் உதவுகிறது. இது மன அழுத்தத்தை பெரிய அளவில் குறைக்கிறது