சுய பாதுகாப்பு முறை என்பது ஒருவர் தம் அன்றாட வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய நடைமுறையாகும். இதில் சுய பாதுகாப்பு முறையின் முக்கியத்துவம் குறித்து காணலாம்
மன அழுத்தம்
சுய பாதுகாப்பு இல்லாமை மன அழுத்தத்தை அதிகரிப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே மன ஆரோக்கியத்தைப் பாதுகாப்பு சுய கவனிப்பு செய்வது முக்கியமாகும்
உற்சாகமாக இருப்பது
மனதை உற்சாகமாக வைத்துக் கொள்வதன் ஒரு சிறந்த வழியாக தங்களைத் தாங்களே பராமரித்துக் கொள்வது ஆகும். சுய பராமரிப்பின் மூலம் உற்சாகமாக இருக்க முடியும்
உடல் ஆரோக்கியத்திற்கு
ஆரோக்கியமான உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி செய்வது போன்ற சுய பாதுகாப்பு முறைகளைக் கையாள்வது அவசியமாகும். இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானதாகும்
மனநிலை மேம்பாடு
சுய-கவனிப்பு பயிற்சி மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வின் அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது. இதன் மூலம் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
நீண்டகால மன அழுத்த நிலை
வழக்கமான சுய-கவனிப்பின் மூலம் நீண்டகால மன அழுத்தத்தால் ஏற்படும் உடல், மன மற்றும் உணர்ச்சி சோர்வு நிலையைக் குறைக்க முடியும். சுய கவனிப்பின் மூலம் எதிர்மறையான விளைவுகளைத் தடுத்து, உடலுக்குத் தேவையான ஆற்றலைப் பெறலாம்
அதிகரித்த சுய மரியாதை
தனிப்பட்ட கவனிப்பு நடைமுறைகள் சுய மதிப்பு, மரியாதையை அதிகரிக்க உதவுகிறது. இதில் நம் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து, நன்றாக உணர வைக்கும் செயல்களில் ஈடுபடுவதன் மூலம் கவனிப்புக்கு, கவனத்திற்கும் தகுதியானவராகக் கருதப்படுவர்