உங்க குழந்தைகள ஹோம்வொர்க் செய்ய வைக்க ஈசியான வழிகள்!

By Kanimozhi Pannerselvam
06 Feb 2024, 23:23 IST

வீட்டுப்பாட உதவித்திட்டம்

குழந்தைகள் சரியாக வீட்டுப்பாடம் செய்ய, உங்கள் குழந்தையுடன் அமர்ந்து, ஒவ்வொரு இரவும் அவர் வீட்டுப்பாடம் செய்வதற்கான திட்டத்தை உருவாக்கவும். இதனை குழந்தைகளுடன் சேர்த்து செய்வது அவர்களது ஆர்வத்தை அதிகரிக்க உதவும்.

அமைதியான இடம்

உங்கள் பிள்ளை படிப்பதற்காக அமைதியான, கவனச்சிதறல் இல்லாத இடத்தைக் கண்டறியவும்.

சிற்றுண்டி

உங்கள் பிள்ளை பசியுடன் இருந்தால், வேலையில் கவனம் செலுத்துவது கடினமாக இருக்கும்.

கற்றல் கருவிகளை அணுகுதல்

பென்சில்கள், அழிப்பான், கால்குலேட்டர் மற்றும் பிற முக்கியமான கருவிகள் எளிதில் அணுகக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள், எனவே அவற்றைக் கண்டுபிடிப்பதில் நேரம் வீணாகாது.

வெகுமதி கொடுத்து பாராட்டுகள்

ஹோம்வொர்க் முடித்த உடனே டி.வி. பார்க்கலாம், பிடித்த ஸ்நாக்ஸ் சாப்பிடலாம், வீடியோ கேம் விளையாடலாம் போன்ற விஷயங்களை அறிவித்து குழந்தைகளை உற்சாகப்படுத்துங்கள்.

மன அழுத்தத்தை கட்டுப்படுத்துவது

உங்கள் பிள்ளை மன அழுத்தத்தில் இருந்தால், படிப்பதில் அல்லது ஹோம்வொர்க் செய்வதை முதலில் தொடங்குவதில் சிரமம் இருக்கலாம். இப்படிப்பட்ட தருணங்களில் அவர்களுடன் நேரம் செலவிடுவது, மனம் விட்டு பேசுவதன் மூலமாக உற்சாகப்படுத்தலாம்.