இன்று பலரும் பல்வேறு காரணங்களால் மன அழுத்தத்தை சந்திக்கின்றனர். சில ஆரோக்கியமான பழக்கங்களுடன் மன அழுத்தத்தை எளிதில் போக்கலாம். இதில் மன அழுத்தத்தைக் குறைக்க நாம் வீட்டில் செய்யக்கூடிய பழக்கங்களைக் காணலாம்
ஆழ்ந்த சுவாசம்
ஆழமான சுவாசப் பயிற்சிகள் மேற்கொள்வது நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்த உதவுகிறது. மெதுவான, கட்டுப்படுத்தப்பட்ட சுவாசம் மூளைக்கு பாதுகாப்பாக இருப்பதை சமிக்ஞை அளித்து, கவலை அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது
தியானம் செய்வது
மனதைக் கட்டுப்படுத்தி தியானம் மேற்கொள்வது நிகழ்காலத்தில் கவனம் செலுத்த உதவுகிறது. இதன் மூலம் கடந்த காலம் அல்லது எதிர்காலம் பற்றிய கவலைகளைக் குறைக்கலாம்
சுறுசுறுப்பாக இருப்பது
உடற்பயிற்சி செய்வது எண்டோர்பின்களை வெளியிட உதவுகிறது. இது மன அழுத்த ஹார்மோனான கார்டிசோலை குறைத்து, நல்ல மனநிலையை மேம்படுத்தி, கவலை உணர்வுகளைக் குறைக்கிறது
தூண்டுதல்களைக் குறைப்பது
காஃபின், சர்க்கரை மற்றும் நிகோடின் போன்றவை கவலை அறிகுறிகளை அதிகரிக்கலாம். எனவே இந்த தூண்டுதல்களைக் குறைக்க முயற்சிக்க வேண்டும்
திரை நேரத்தை வரம்பிடுதல்
செய்தி பார்ப்பது அல்லது சமூக ஊடகங்களில் அதிக கவனம் செலுத்துவது கவலையை அதிகரிக்கிறது. எனவே, திரை நேரத்தை வரம்பிடுவது நல்லது