எண்டோர்பின் ஹார்மோன்கள் உங்கள் உடலில் வலியை குறைக்கும். இந்த ஹார்மோன் உடலில் அதிகரிப்பதால், மன அழுத்தமும் குறைகிறது. இது உங்கள் மனநிலையையும் மேம்படுத்துகிறது.
எண்டோர்பினை அதிகரிக்க
உடலில் எண்டோர்பின் ஹார்மோனை அதிகரிக்க வேண்டுமானால் நல்ல தூக்கம் தேவை. அதேசமயம் தினந்தோறும் தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
இது மனித மூளையில் காணப்படும் ஹார்மோன் ஆகும். ஆக்ஸிடோனின் ஹார்மோன், பாலூட்டுதல் மற்றும் பிரசவத்திற்கு உதவுகிறது. இந்த ஹார்மோனின் மூலம் அன்பும் நம்பிக்கையும் கூடும்.
ஆக்ஸிடோனினை அதிகரிக்க
உடலில் ஆக்ஸிடோனின் ஹார்மோனின் அளவை அதிகரிக்க தனிமையில் இருந்து விலகி இருக்க வேண்டும். இதற்காக உங்களால் முடிந்த அளவு நேரத்தை குடும்பத்துடன் செலவிடலாம். மேலும், உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் வேலையைச் செய்வது ஆக்ஸிடோனின் ஹார்மோனை அதிகரிக்கும்.
டோபமைன் ஹார்மோன்
டோபமைன் என்பது உடலில் உள்ள முக்கியமான ஹார்மோன்களில் ஒன்றாகும். எந்த ஒரு வேலையில் கவனம் செலுத்துவது முதல் எதையாவது நினைவில் வைத்திருப்பது வரை அனைத்திலும் இந்த ஹார்மோன் முக்கிய பங்கு வகிக்கின்றன.
டோபமைனை அதிகரிக்க
உடலில் டோபமைன் ஹார்மோனை அதிகரிக்க போதுமான தூக்கம் அவசியம். அதே நேரத்தில், புரதம் நிறைந்த உணவை உட்கொள்வது அவசியம்.