நம் மனநிலையை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். இதற்கு உடலில் செரோடோனின், டோபமைன், ஆக்ஸிடாஸின் மற்றும் எண்டோர்பின்கள் போன்ற மகிழ்ச்சியான ஹார்மோன்கள் உடலில் உற்பத்தியாக வேண்டும். இதில் மகிழ்ச்சி ஹார்மோன்கள் அதிகரிக்க செய்ய வேண்டிய அன்றாட பழக்கங்களைக் காணலாம்
நேர்மறை எண்ணங்கள்
காலை எழும் போது நேர்மறையான எண்ணங்களுடன் நாளைத் தொடங்குவதன் மூலம், அந்த நாள் இனிய நாளாக அமையும். அதனுடன் நன்றி செலுத்தும் விஷயங்களை மனதில் ஒப்புக் கொள்வது உடலில் டோபமைன் அளவை அதிகரிக்கலாம்
காலை உடற்பயிற்சி
காலை நேர உடற்பயிற்சியில் ஈடுபடுவது நல்ல மனநிலையை அதிகரிக்கும். அதாவது உடல் செயல்பாடுகளில் ஈடுபடும்போது, உடலிலிருந்து எண்டோர்பின்கள் வெளியிடப்படுகிறது. தினமும் காலையில் செய்யும் சிறிய 10 நிமிட நடைபயிற்சி கூட போதுமான என்டோர்பின்களை வெளியிடும். இது பல மணி நேரங்களுக்கு மகிழ்ச்சியாக உணரவைக்கிறது
தியானம்
ஆழ்ந்த மூச்சுப் பயிற்சிகள் மற்றும் தியானம் செய்வது மன அழுத்தத்தைக் குறைக்கவும், அமைதியான உணர்வுகளை அதிகரிப்பதற்கும் உதவுகிறது. இது மகிழ்ச்சியான ஹார்மோன் அளவை அதிகரிக்க உதவுகிறது. எனவே தினமும் தியானம் மேற்கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்
சூரிய ஒளி பெறுவது
இயற்கையான ஒளியில் நம்மை வெளிப்படுத்துவது, குறிப்பாக காலையில் உடலில் செரோடோனின் உற்பத்தியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது மகிழ்ச்சியின் உணர்வுகளுக்கு பங்களிக்கும். எனவே தினமும் குறைந்த 15 நிமிடங்களாவது சூரிய ஒளி பெற முயற்சிக்க வேண்டும்
ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் சேர்ப்பது
இந்த வகை ஊட்டச்சத்துக்கள் மூளை ஆரோக்கியம் மற்றும் மனநிலையை மேம்படுத்த உதவுகிறது. அதன் படி, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த ஆளி விதைகள், கொழுப்பு நிறைந்த மீன் மற்றும் வால்நட்ஸ் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்
பிடித்த செயலில் ஈடுபடுவது
நமக்குப் பிடித்தமான செயல்களில் ஈடுபடுவதன் மூலம் உடலில் மகிழ்ச்சி ஹார்மோன்களைக் கணிசமாக அதிகரிக்கலாம். இவை நாள் முழுவதும் உற்சாகமாக வைத்துக் கொள்ள உதவுகிறது
நல்ல இரவு தூக்கம்
மகிழ்ச்சி ஹார்மோன்களான செரோடோனின் மற்றும் டோபமைன் போன்றவற்றை ஒழுங்குபடுத்துவதற்கு தரமான தூக்கம் அவசியமாகும். எனவே மன ஆரோக்கியத்திற்கு தினமும் 7 முதல் 9 மணி நேரம் இரவு தூக்கத்தைப் பின்பற்ற வேண்டும்.