எண்டோர்பின்கள் ஒரு வகையான நல்ல உணர்வைத் தரும் மூளை இரசாயனமாகும். இது இயற்கையான வலி மற்றும் மன அழுத்த நிவாரணிகளாக செயல்படுகின்றன. இதில் எண்டோர்பின்களை அதிகரிக்க உதவும் வழிகளைக் காணலாம்
தியானம்
உடலில் எண்டோர்பின் வெளியீட்டை அதிகரிக்க தியானம் ஒரு சிறந்த வழியாகக் கருதப்படுகிறது. இதன் மூலம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்
உடற்பயிற்சி
அதிக உடற்பயிற்சி எப்போதும் எண்டோர்பின்களின் அதிக உற்பத்தியைத் தருவதாகக் கூறப்படுகிறது. 30 நிமிட உடற்பயிற்சிக்குப் பிறகு உடலில் எண்டோர்பின்கள் வெளியேறலாம். இது என்டோர்பின்களை அதிகரிக்கச் செய்யலாம்
நறுமண எண்ணெய்கள்
லாவெண்டர் போன்ற உங்களுக்கு பிடித்த அமைதியான எண்ணெய்களை நுகர்வது எண்டோர்பின்களின் வெளியீட்டைத் தூண்டுகிறது. இதன் மூலம் உடலில் எண்டோர்பின்களை அதிகரிக்கலாம்
டார்க் சாக்லேட்
டார்க் சாக்லேட் சாப்பிடுவது எண்டோர்பின்களை வெளியிட உதவுகிறது. மன அழுத்தம் அல்லது சோகத்தின் போது சாக்லேட் சாப்பிடுவது எண்டோர்பின்களின் வெளியீட்டைத் தூண்டுகிறது
இசை கேட்பது
மனநிலையை மேம்படுத்த உதவும் சிறந்த தீர்வாக அமைவது இசை கேட்பதாகும். இது நம் உடலில் எண்டோர்பின்களின் அளவை அதிகரிக்கிறது
அதிகம் சிரிப்பது
சத்தமாக சிரிப்பது கவலை அல்லது மன அழுத்தத்திலிருந்து விடுபட வைக்கிறது. இது உடல் எண்டோர்பின்களை வெளியிட உதவுகிறது