காலை எழுந்தவுடனே சிலர் கடினமான மூட்டுகள் மற்றும் தசை பிரச்சனைகளைச் சந்திப்பர். இது காலை நேரத்தை கடினமாக்கலாம். இதைக் குறைக்கவும், உற்சாகத்துடன் தொடங்கவும் உதவும் சில எளிய பயனுள்ள வழிகளைக் காணலாம்
மென்மையான நீட்சி
சில மென்மையான நீட்சிகளுடன் நாளைத் தொடங்குவது இறுக்கமான தசைகளை தளர்த்த உதவுகிறது. இது சுழற்சியை மேம்படுத்தவும், மூட்டுகளில் இயக்கத்தை அதிகரிக்கவும் உதவுகிறது
லேசான இயக்கம்
காலை எழுந்தவுடன் ஒரு சிறிய நடைப்பயிற்சி அல்லது லேசான உடற்பயிற்சிகள் செய்வது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதுடன், விறைப்புத் தன்மையைக் குறைக்கவும் உதவுகிறது. இது ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது
மசாஜ் செய்வது
கடினமான பகுதிகளை மெதுவாக மசாஜ் செய்வது இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இது தசைகளை தளர்த்தவும், விறைப்பிலிருந்து உடனடி நிவாரணம் அளிக்கவும் உதவுகிறது
வெப்ப சிகிச்சை
சில நிமிடங்களுக்கு விறைப்பான தசைகள் அல்லது மூட்டுகளுக்கு ஒரு ஹீட்டிங் பேட் பயன்படுத்தலாம். இது வெப்ப சுழற்சியை அதிகரிப்பதுடன், வலியைக் குறைத்து நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துகிறது
வெதுவெதுப்பான குளியல்
காலையில் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது பதட்டமான தசைகளை தளர்த்தவும், கடினமான மூட்டுகளை ஆற்றவும் உதவுகிறது