பருவகால மாற்றத்தின் போது சூரிய ஒளி இருப்பது, அதிக ஈரப்பதம் உள்ளிட்டவை மனநிலை மாற்றங்களை பாதிக்கலாம். இதில் மழைக்கால மூட் ஸ்விங்கை எப்படி கையாள்வது என்பதைக் காண்போம்
உடல் செயல்பாடு
தினமும் 15 முதல் 20 நிமிடங்களுக்கு உடல் செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும். உடற்பயிற்சி செய்வது மனநிலையை அதிகரிக்கவும், மனச்சோர்வைக் குறைக்கவும் உதவும்
சூரிய ஒளி பெறுவது
வைட்டமின் டி குறைபாட்டைச் சரி செய்யவும், மனநிலையை மேம்படுத்தவும் தினமும் சிறிது நேரம் சூரிய ஒளியில் நிற்கலாம். இது மனக்கவலையை போக்கவும் உதவுகிறது
நல்ல தூக்கம்
மனநிலை மேம்பாட்டிற்கு நல்ல சீரான தூக்கம் முக்கியமானதாகும். எனவே சரியான தூக்க அட்டவணையைப் பின்பற்றி நல்ல தூக்கம் பெறுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்
மற்றவர்களுடன் இணைதல்
தனிமையில் இருப்பது ஒருவகையான மனநல பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கலாம். எனவே குடும்பத்தினர், நண்பர்களுடன் இணைவதன் மூலம் மனநிலையை மேம்படுத்தலாம்
தினசரி நடவடிக்கை
அன்றாட நடவடிக்கையில் பத்திரிக்கை எழுதுவது, சரியான அட்டவணையை வைத்திருப்பது மற்றும் ஹாப்பியைப் பின்பற்றுவது போன்றவை நன்றாக உணர வைக்கும்