இன்றைய பிஸியான காலகட்டத்தில், பதட்டத்துடன் வாழ்வதால் படுக்கை நேரம் கூட மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம். இதனால் அமைதியின்மை, எண்ணங்களின் ஓட்டம், மற்றும் அதிக சுறுசுறுப்பான மனம் போன்றவை மணிக்கணக்கில் அலைபாய்ந்து கொண்டே இருக்க வைக்கிறது
தரமான தூக்கம்
இது போன்ற காரணிகள் இருப்பினும், மன ஆரோக்கியத்திற்கு தரமான தூக்கம் அவசியமாகக் கருதப்படுகிறது. இதை மேம்படுத்த பல்வேறு வழிகள் உள்ளன. இதில் தரமான தூக்கத்திற்கு உதவும் காரணிகளைக் காணலாம்
தூக்க வழக்கத்தை கடைபிடிப்பது
வார இறுதி நாட்களில் கூட ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் படுக்கைக்குச் சென்று எழுந்திருப்பதை வழக்கமாக்க வேண்டும். மூளைக்கு ஓய்வு நேரம் என்பதை சமிக்ஞை செய்ய புத்தகம் வாசிப்பது, மென்மையான இசை கேட்பது போன்ற அமைதியான பழக்கங்களைச் சேர்க்கலாம்
ஆழ்ந்த சுவாசத்தை முயற்சிப்பது
எளிய சுவாசப் பயிற்சிகள் அல்லது ஒவ்வொரு தசைக் குழுவையும் மெதுவாக இறுக்கி ஓய்வெடுப்பது, நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்த உதவுகிறது. இது தூங்குவதற்கு முன்னதாக பதட்ட அறிகுறிகளைக் குறைக்கிறது
இரவில் திரை நேரத்தைக் கட்டுப்படுத்துவது
தொலைபேசிகள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வரும் நீல ஒளி காரணமாக மெலடோனின் அளவு பாதிக்கப்படும். இது தூக்கத்தைப் பாதிக்கும். எனவே படுக்கைக்கு குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்பு திரைகள் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும்
அதிக உணவைத் தவிர்ப்பது
தாமதாக உணவு உட்கொள்வது, அதிக உணவை சாப்பிடுவது இரண்டுமே பதட்டத்தை அதிகரிப்பதுடன், தூங்குவதை கடினமாக்கலாம். எனவே, மாலையில் சூடான பால், வாழைப்பழங்கள் அல்லது கெமோமில் தேநீர் போன்ற லேசான, அமைதியான உணவுகளைத் தேர்ந்தெடுக்கலாம்
நாட்குறிப்பை உருவாக்குவது
மனதில் உள்ள அனைத்தையும் எழுத 5-10 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளலாம். எண்ணங்களை காகிதத்தில் வைப்பது மனக் குழப்பத்தை குறைக்க உதவுகிறது. எனவே இது கவலைகளிலிருந்து விடுபட வைத்து நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கிறது