மனதை அமைதிப்படுத்தி நல்ல தூக்கத்தைப் பெறுவதற்கு பல்வேறு வழிகள் உள்ளது. சில நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் விரைவாக தூக்கத்தைப் பெறலாம். இதில் இரவு படுத்த உடனே தூங்குவதற்கு உதவும் சில குறிப்புகளைக் காணலாம்
தூங்கும் நேரத்தை பழக்கப்படுத்துதல்
நல்ல தூக்கம் பெற வேண்டும் என்றால் முதலில் சரியான நேரத்திற்கு தூங்க வேண்டும். அதே போல, இரவில் தூங்குவதற்கான வெப்பநிலையை சரி செய்வது, படுக்கையை தயார் செய்வது போன்ற சில விஷயங்களைச் செய்வது தூங்குவதற்கான நேரம் வந்து விட்டதைக் குறிக்கிறது
தளர்வடையச் செய்வது
உடலை தளர்வாக்குவதன் மூலம் விரைவாக தூக்கத்தைப் பெறலாம். இந்த செயல்முறையில் உடலின் ஒவ்வொரு பகுதியையும் கவனம் செலுத்தி வேண்டுமென்றே தளர்வடையச் செய்யலாம். கால் பாதத்தில் தொடங்கி, மேல் நோக்கி தலைப்பகுதியை அடையும் முன் ஆழ்ந்த தூக்கம் பெறலாம்
பிராணாயாமம்
பதட்டம் மன அழுத்தம்மற்றும் கவலை போன்றவற்றால் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்களுக்கு பிராணாயாமம் சிறந்த தேர்வாக அமைகிறது. தூங்கச் சென்ற பிறகு, பிராணாயாமாவை மேற்கொள்வதன் மூலம் விரைவாக தூக்கத்தைப் பெறலாம்
குழப்பமில்லாத மனம்
மனதில் எதையும் போட்டு குழப்பிக் கொள்ளாமல், மன அழுத்தமின்றி தூங்க வேண்டும். டைரி எழுதும் பழக்கத்தை வைத்துக் கொள்வது, மனதில் உள்ள வேண்டாத விஷயங்கள் அனைத்தையும் எழுதி விட தளர்வான உணர்வு கிடைக்கும். இது தூக்கத்தை அதிகரிக்கிறது
மொபைல், டிவி பார்ப்பதைத் தவிர்ப்பது
தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக டிவி, லேப்டாப், மொபைல் பயன்படுத்துவதை தவிர்த்துவிட வேண்டும். ஏனெனில், இதன் திரைகளிலிருந்து வெளிவரும் நீல நிற ஒளி, மெலடோனின் என்ற தூக்கத்தைத் தரும் ஹார்மோனைக் குறைக்கிறது. எனவே விரைவில் தூங்க படுக்கைக்கு முன் மொபைலைத் தவிர்க்க வேண்டும்