அன்பின் மொழியைப் போலவே, ஒவ்வொரு உணர்வையும் வெளிப்படுத்த கணவன் -மனைவிக்குள் தனி மொழி உண்டு. இதில் மிகவும் முக்கியமானது “மன்னிப்பு கேட்பது”. மன்னிப்பு அணுகுமுறை உறவின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். ஒரு உறவில் மோதல்களைத் தவிர்ப்பது மற்றும் அவற்றைத் தீர்ப்பதற்கான வழிகளைக் கண்டுபிடிப்பது முக்கியம்.
உங்கள் தவறுக்கு வருத்தம் தெரிவிப்பது முக்கியம், உங்கள் தவறு உங்கள் துணையை எவ்வாறு பாதித்தது என்பதை நீங்கள் புரிந்து கொண்டீர்கள் என்பதை உணர வைத்தால் அது அவர்களை மகிழ்விக்கும்.
உங்கள் பொறுப்பை மட்டுமல்ல, உங்கள் தவறுகளையும் ஏற்றுக்கொள்ளுங்கள். சண்டை வந்துவிட்டால் சின்ன குழந்தைகள் போல் காய் விட்டுக்கொள்ளாமல், வாழ்க்கை துணையுடன் மனம் விட்டு பேசுங்கள்.
மன்னிப்பு கேட்பது மற்றும் பிரச்சனைக்கு தீர்வு காண்பது பற்றி உங்கள் துணையுடன் விவாதிப்பது உங்களுக்கிடையில் நம்பிக்கையை மீட்டெடுக்க உதவும்.
தவறுகளை திருத்திக் கொள்வதற்கான உறுதிமொழியை வழங்குவதும், அந்த வாக்குறுதியை நிறைவேற்ற முயற்சிப்பதும் உங்கள் அன்புக்குரியவர்கள் உங்களை எளிதாகப் புரிந்துகொள்ள உதவும்.
உங்கள் தவறுக்கு மன்னிப்பு கேட்பது உங்களை சிறியதாக ஆக்காது, ஆனால் உங்கள் துணையின் பார்வையில் உங்களை பெரியவராக்கும். உங்களுக்கு இடையே உள்ள பிரச்சனை, மனக்கசப்பை தீர்க்க இது ஒரு நல்ல வழி.