தினமும் ஒரு மணி நேரம் பேசாமல் இருந்தால்... உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் தெரியுமா?
By Kanimozhi Pannerselvam
22 Jan 2024, 10:19 IST
ரத்த அழுத்தம்
இரத்த அழுத்தத்தைக் குறைக்க மௌன விரதம் மிகவும் நன்மை பயக்கும். நிதானமான மனநிலையில் சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருக்கும் போது, உடலில் இரத்த ஓட்டம் சீராகி, இதய நோய் அபாயமும் குறையும் என நிபுணர்கள் நம்புகின்றனர்.
மன ஆரோக்கியம்
அமைதியாக இருப்பது ஒரு சக்திவாய்ந்த சிகிச்சை. தினமும் ஒரு மணி நேரம் அமைதியாக உட்கார்ந்து யோசித்தால் மனம் கூர்மையடைகிறது. இது சிந்திக்கும் மற்றும் புரிந்துகொள்ளும் திறனையும் அதிகரிக்கிறது.
அமைதி என்பது மன அழுத்தத்தைக் குறைக்கும் ஒரு சக்திவாய்ந்த கருவியாகும். நீங்கள் அமைதியாக இருக்கும்போது, உங்கள் உடலின் அழுத்த பதில் அமைப்பு ஓய்வெடுக்கலாம். அமைதியானது மன அழுத்த ஹார்மோன்களின் உற்பத்தியைக் குறைப்பதோடு, நோயெதிர்ப்பு செயல்பாடு, வளர்சிதை மாற்ற சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை தீர்க்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஆற்றல் சேமிப்பு
நாள் முழுவதும் தொடர்ந்து பேசுவது சோர்வு மற்றும் குறைந்த ஆற்றலுக்கு வழிவகுக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் சிறிது நேரம் அமைதியாக இருந்தால், . நாள் முழுவதும் உற்சாகமாக உணர்வீர்கள் மற்றும் தீவிரமாக வேலை செய்ய தேவையான ஆற்றலும் கிடைக்கும்.
கேட்கும் திறன்
அமைதியாக இருப்பது உங்கள் தகவல் தொடர்பு திறன்களை மேம்படுத்துகிறது. நீங்கள் அமைதியாக இருந்து சிறிது நேரம் ஆழ்ந்து யோசித்தால், நீங்கள் எதிரே இருப்பவர்கள் பேசுவதை உற்று கவனிக்க கற்றுக்கொள்ளலாம். ஒருவர் பேசுவதை விட, அடுத்தவர்கள் பேசுவதை ஆழ்ந்து கவனிப்பதே சிறந்த தகவல் தொடர்பாகும்.