மாணவர்கள் தேர்வில் கவனம் செலுத்த உதவும் காலை பழக்கங்கள்

By Gowthami Subramani
19 Feb 2025, 19:30 IST

தேர்வு நேரம் வந்துவிட்டாலே மாணவர்கள் மன அழுத்தம், பதட்டம் தொடர்பான பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் தேர்வின் போது மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்க தினந்தோறும் சில காலை பழக்கங்களைக் கையாளலாம்

உடற்பயிற்சி செய்வது

லேசான உடற்பயிற்சி அல்லது நீட்சிப்பயிற்சி செய்வது உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இது உடல் மற்றும் மனதை அமைதிப்படுத்தி மன அழுத்தத்தைக் குறைக்கிறது

ஆரோக்கியமான காலை உணவு

நட்ஸ், பழங்கள், முட்டைகள் மற்றும் புரதம் நிறைந்த ஆரோக்கியமான காலை உணவுகள் நாள் முழுவதும் ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது

நீரேற்றமாக இருப்பது

காலையை சரியாகத் தொடங்குவது, கவனத்தை கூர்மைப்படுத்தி, படிப்பில் சிறப்பாகச் செயல்பட உதவுகிறது. எனவே, மூளையை நீரேற்றத்துடன் வைத்திருக்க ஒரு கிளாஸ் தண்ணீருடன் நாளைத் தொடங்கலாம்

ஆழ்ந்த சுவாசம்

நரம்புகளை அமைதிப்படுத்தவும், செறிவை மேம்படுத்தவும் தினமும் 5-10 நிமிடங்கள் ஆழ்ந்த சுவாசம் அல்லது தியானம் செய்யலாம். இது மனதை அமைதியாக வைக்கிறது

படிப்பு இலக்குகளை அமைப்பது

தினமும் படிப்பு இலக்குகளை அமைப்பது படிப்பின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கிறது. இது தேர்வின் போது ஏற்படும் மன அழுத்தம், பதட்டத்தைக் குறைக்கலாம்

தொலைபேசி பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது

தொலைபேசி பயன்பாடு மன அழுத்தம், பதட்டத்தை ஏற்படுத்தலாம். இதைக் கட்டுப்படுத்துவதன் மூலம் கவனச்சிதறல்களைத் தவிர்க்கலாம். இது படிப்பின் மீதான கவனத்தை ஆதரிக்கிறது