அதிகாலை நேரத்தில் எழுவது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதில் அதிகாலையில் எழுவதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்
ஆரோக்கியமான உணவு
காலையில் சீக்கிரம் எழுவது சத்தான காலை உணவோடு நாளைத் தொடங்குவதற்கான வாய்ப்பு அதிகமாகும். இது காலை முழுவதும் திருப்தியாகவும் உற்சாகமாகவும் உணரவைக்கிறது
வைட்டமின் டி அதிகரிக்க
அதிகாலையில் எழும் போது காலையில் சூரியனைப் பயன்படுத்துவதன் மூலம் வைட்டமின் D-ன் இயற்கையான ஆதாரத்தை பெறலாம். இது மன ஆரோக்கியம், நோயெதிர்ப்புச் சக்தி, மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு உதவுகிறது
உடற்பயிற்சி செய்ய
அதிகாலையில் எழுந்து வழக்கமான காலை உடற்பயிற்சி செய்வது உடல் ஆரோக்கியத்தை அதிகரிப்பதுடன், மனதைத் தெளிவுபடுத்தவும், பதட்டத்தைக் குறைக்கவும் உதவுகிறது
உற்சாகமாக வைக்க
சீரான தூக்க அட்டவணையை கடைபிடித்து சீக்கிரம் எழுந்து, தவறாமல் உடற்பயிற்சி செய்யலாம். மேலும், ஆரோக்கியமான காலை உணவை பின்பற்றலாம். இந்தப் பழக்கங்கள் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், ஆற்றல் மட்டங்களை உயர்த்தவும் உதவுகிறது
உற்பத்தித்திறனை அதிகரிக்க
அதிகாலையில் சீக்கிரம் எழுவதால், அந்த நாளைச் சரியாக திட்டமிட கூடுதல் நேரம் கிடைக்கும். இது கவனம், செறிவை மேம்படுத்தி பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கிறது
சரும ஆரோக்கியத்திற்கு
சீக்கிரம் எழுவது சருமம் பழுது பார்ப்புக்கு முக்கியமானதாகும். ஆழ்ந்த உறக்கத்தின் போது உடல் கொலாஜனை உற்பத்தி செய்து, சருமத்தை பொலிவாக வைத்திருக்க உதவுகிறது. இவ்வாறு சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது