உடலில் கார்டிசோல் எனப்படும் மன அழுத்தத்திற்கான ஹார்மோன்கள் சுரப்பதன் காரணமாக, ஹார்மோன் சமநிலையை பாதிக்கப்படுகிறது. மன அழுத்தத்தை தூண்டும் காரணிகளை இயற்கையாகவே சரிபடுத்த சில உணவுகளை சேர்த்துக் கொள்ளலாம்
மெக்னீசிய உணவுகள்
கீரை, காலே, அவகேடோ, பீன்ஸ் வகைகள், வாழைப்பழங்கள் போன்ற மெக்னீசியம் நிறைந்த உணவுகளை உட்கொள்வது பதட்டம் மற்றும் வீக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது
கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள்
கார்போஹைட்ரேட் மூளையில் செரடோனின் என்ற மகிழ்ச்சியான ஹார்மோனை ஊக்குவிக்கிறது. எனவே உணவில் ஓட்ஸ், முழு தானியம், பார்லி, குயினோவா போன்றவற்றைச் சேர்த்துக் கொள்வது நாள் முழுவதும் மகிழ்ச்சியாக மற்றும் சுறுசுறுப்பாக வைக்கிறது
சிட்ரஸ் பழங்கள்
இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. உடல் மற்றும் மன அழுத்தத்தை குறைத்து கார்டிசோலை அதிகரிக்க செய்யாமல் இருக்கும். இதன் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்கலாம்
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்
உடலில் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை அதிகரித்து மூளை செயல்பாடுகளை ஊக்குவிக்கிறது. எனவே ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன்,அக்ரூட் பருப்புகள், ஆளி விதைகள் போன்றவற்றை உட்கொள்ளலாம்
ஜிங்க் நிறைந்த உணவுகள்
உடலின் மற்ற பகுதிகளுடன் மூளையின் செயல்பாடுகளை இணைக்கும் நரம்புகளை அமைதியாக வைக்க உதவுகிறது.அதன் படி, முந்திரி, முட்டை, கோழி இறைச்சி போன்ற ஜிங்க் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்
மஞ்சள்
இதில் பயோ ஆக்டிவ் சேர்மங்கள் உள்ளது. மேலும் இதில் உள்ள குர்குமின் பல காலமாக மன அழுத்தத்துக்கு மருந்தாக பயன்படுகிறது. மஞ்சள் உடலில் டோபமைன் மற்றும் செரோடோனின் போன்ற மகிழ்ச்சி ஹார்மோன்களை அதிகரிக்க செய்கிறது
கிரீன் டீ
கிரீன் டீ அருந்துவது நரம்புகளை அமைதிப்படுத்துகிறது. இதில் அதிக ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளது. இவை மன அழுத்தத்தைக் குறைக்க சிறந்த தேர்வாகக் கருதப்படுகிறது
கெமோமில் டீ
இது உடலில் கார்டிசோல் ஹார்மோன் சுரப்புகளைக் குறைக்கிறது. மேலும் இது நல்ல உறக்கத்தை அளிப்பதுடன், மன அழுத்தம் மற்றும் பதட்டத்தைக் குறைக்கிறது