உடலில் கார்டிசோல் அளவு அதிகமாக இருக்கும் போது மன அழுத்தம், பதட்டம் மற்றும் எடை அதிகரிப்பு பல்வேறு உடல்நல பிரச்சனைகள் ஏற்படலாம். இதில் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோனான கார்டிசோலை சில உணவுகளின் உதவியுடன் கட்டுப்படுத்தலாம். கார்டிசோலின் அளவைக் குறைக்க உதவும் உணவுகள் சிலவற்றைக் காணலாம்
கீரை
கார்டிசோல் அளவைக் குறைக்க தினமும் ஒரு கப் அளவிலான மக்னீசியம் நிறைந்த கீரை வகைகளிய சாப்பிடலாம். ஏனெனில் மக்னீசியம் குறைபாடு கார்டிசோல் உற்பத்திக்கு வழிவகுக்கும்
ப்ரோக்கோலி
இதில் உள்ள வைட்டமின் சி சத்துக்கள் கார்டிசோலின் அளவைக் குறைக்க உதவுகிறது. தினமும் ஒரு கப் ப்ரோக்கோலியை உட்கொள்வதன் மூலம் மன அழுத்தத்தை எதிர்த்துப் போராட உதவும் வைட்டமின் சி சத்துக்களைப் பெறலாம்
பூண்டு
பூண்டில் உள்ள அல்லிசின் என்ற கலவை கார்டிசோல் உற்பத்தியைக் குறைப்பதாக கூறப்படுகிறது. அதன் படி உணவில் பூண்டு சேர்ப்பதன் மூலம் கார்டிசோல் அளவைக் குறைக்கலாம். இது ஒட்டுமொத்த மன அழுத்தத்தை மேம்படுத்த உதவுகிறது. எனவே தினமும் குறைந்தது 4 கிராம் பூண்டு உட்கொள்வதை உறுதி செய்ய வேண்டும்
பழுப்பு அரிசி
பிரவுன் ரைஸ் போன்ற சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் இரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்த உதவுகிறது. இது கார்டிசோல் உற்பத்தியைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. பிரவுன் ரைஸ் எடுத்துக் கொள்வதன் மூலம் கார்டிசோலின் அளவை சீராக வைக்கலாம்
கிரீன் டீ
கிரீன் டீயில் L-theanine என்ற அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இது தளர்வை ஊக்குவித்து, மன அழுத்தத்தைக் குறைக்கிறது. எல்- தியானைன் கார்டிசோலின் அளவைக் கணிசமாகக் குறைத்து, மனநிலையை மேம்படுத்துவதாகக் கூறப்படுகிறது
பாதாம்
பாதாமில் மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. இது கார்டிசோலைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த மக்னீசியம் கார்டிசோல் அளவைக் குறைக்க உதவுகிறது. எனவே தினமும் 4 முதல் 5 பாதாம் பருப்பு உட்கொள்வதன் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்கலாம்
டார்க் சாக்லேட்
70% அல்லது அதற்கு மேற்பட்ட கோகோ உள்ளடக்கம் கொண்ட டார்க் சாக்லேட் சாப்பிடுவது கார்டிசோல் அளவைக் குறைக்க உதவுகிறது. ஒரு நாளைக்கு 20-30 கிராம் வரை டார்க் சாக்லேட் உட்கொள்ளலாம்
வாழைப்பழங்கள்
இது பொட்டாசியம் மற்றும் வைட்டமின் B6 நிறைந்த சிறந்த மூலமாகும். இவையிரண்டுமே கார்டிசோலைக் கட்டுப்படுத்த உதவுகிறது. ஒரு நாளைக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது மன அழுத்த ஹார்மோன் அளவைக் குறைக்க உதவுகிறது
ஆலிவ் எண்ணெய்
ஆலிவ் எண்ணெயில் கார்டிசோல் அளவைக் குறைக்க உதவும் ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்ததாகும். இந்த ஆலிவ் எண்ணெய் நிறைந்த உணவு உட்கொள்ளல் கார்டிசோலின் அளவைக் கணிசமாகக் குறைத்து மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது