கோபத்தை குறைக்க முடியலையா? - இந்த டிப்ஸை பாலோப் பண்ணி பாருங்க!

By Kanimozhi Pannerselvam
21 Dec 2023, 16:07 IST

உடற்பயிற்சி

தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்வது மன அழுத்தத்தைக் குறைக்கும். இதன் விளைவாக, கோபத்தை கட்டுப்படுத்த முடியும்

மனம் விட்டு பேசுதல்

அன்புக்குரியவருடன் உங்களுக்கு கருத்து வேறுபாடு இருந்தால், வெளிப்படையாகப் பேசுங்கள். பேசினால் பல பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

நிதானமாக முடிவெடுங்கள்

ஏதாவது ஒரு விஷயத்தில் மிகவும் கோபமாக இருந்தால், அதைப் பற்றி யோசிப்பதை தற்காலிகமாக நிறுத்துவது அவசியம். கோபத்தின் போது சரியாக எடுக்காத முடிவுகள் மேலும் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்

தியானம்

தினமும் சிறிது நேரம் தியானம் செய்வதன் மூலம் உணர்ச்சிகள் கட்டுக்குள் இருக்கும் கோபத்தை எளிதில் கட்டுப்படுத்தலாம்

புதிர் விளையாட்டு

கோபத்தைக் குறைக்க புதிர்களைத் தீர்க்கலாம். இதில் புத்திசாலித்தனத்தின் வளர்ச்சியும் கோபத்தைக் கட்டுப்படுத்துவதும் சாத்தியமாகும்.

மனநல ஆலோசனை

சில சமயம் கோபம் வருவது சகஜம் ஆனால் கோபம் அதிகமாக இருந்தால், கோபத்தில் ஏதேனும் தீங்கு விளைவிக்கும் போக்கு இருந்தால், மனநல மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.