காலைப்பொழுதை கலகலப்பா ஆரம்பிங்க... இந்த 5 விஷயங்கள பாலோப் பண்ணுங்க!
By Kanimozhi Pannerselvam
16 Feb 2024, 10:27 IST
எழுந்தவுடன் உடனடியாக ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரைக் குடிக்கவும். இது உங்கள் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி உங்களை புத்துணர்ச்சியுடன் உணர வைக்கும்.
நீங்கள் எழுந்தவுடன், உடலை ரிலாக்ஸ் செய்ய சின்ன, சின்ன ஸ்டெச்சிங் பயிற்சிகளை செய்ய வேண்டும். மணிக்கட்டு சுழற்சி மற்றும் கணுக்கால் சுழற்சி போன்றவற்றை செய்வதன் மூலமாக தசை மற்றும் முதுகு வலியை தவிர்க்கலாம்.
காலையில் முதலில் குடல் இயக்கம் இருக்க வேண்டும். மலச்சிக்கல் உங்கள் மனநிலையையும் ஆற்றலையும் பாதிக்கலாம்.
சீக்கிரம் படுக்கைக்குச் செல்லுங்கள். சீக்கிரம் தூங்கி நிம்மதியாக எழுந்தால், காலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் காணலாம். பலர் காலையில் போதுமான தூக்கம் வராததால் மந்தமாக உணர்கிறார்கள்.
இரவு உணவை தாமதமாக சாப்பிடுவதை தவிர்க்கவும். அதேபோல் எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை மட்டுமே இரவில் சாப்பிட வேண்டும். இல்லையெல் காலை எழுந்ததும் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதியுற வேண்டி வரலாம்.