அடிக்கடி “மூட் ஸ்விங்க்ஸ்” ஏற்படுதா... அத குறைக்க ஈசி டிப்ஸ் இதோ!

By Kanimozhi Pannerselvam
14 Jan 2024, 10:01 IST

உடற்பயிற்சி

மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஆரோக்கியமாக இருக்க தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள். யோகா, நடைப்பயிற்சி மற்றும் ஜாகிங் செய்வதன் மூலம் எண்டோர்பின்கள் அதிகமாக வெளியிடப்படுகின்றன. மன அழுத்தத்தை குறைக்கிறது. மனநிலை மாற்றங்கள் கட்டுக்குள் இருக்கும்.

ஆரோக்கியமான உணவு

நீங்கள் உண்ணும் உணவு உங்கள் மனநிலையை பாதிக்கிறது. பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்களை அதிகமாக உட்கொண்டால் எடையைக் கட்டுப்படுத்தலாம். மூட் ஸ்விங்கை குறைக்கும்.

உறக்கம்

தினமும் எட்டு மணி நேரம் தூங்கினால் உடல் ஆரோக்கியம் மேம்படும். சரியான தூக்கம் மன அழுத்தத்தை குறைக்கிறது. தினமும் ஒரே நேரத்தில் தூங்குவது மனநிலையை கட்டுக்குள் வைத்திருக்கும்.

மது

அளவுக்கு அதிகமாக மது அருந்துவது உடல்நலப் பிரச்சினைகளை உண்டாக்கும். மது அருந்துவது மன ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்துகிறது. மது அருந்துவதைத் தவிர்ப்பதன் மூலம் மனநிலை மாற்றங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன.

மகிழ்ச்சிக்கான நேரம்

அன்புக்குரியவர்களுடன் அதிக நேரம் செலவிடுவது மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிடுவது அதிக எண்டோர்பின்களை வெளியிடுகிறது. மனநிலை மாற்றங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன.