புத்திசாலித்தனத்தை அதிகரிக்க சில நடைமுறைப் பழக்க வழக்கங்களைத் தொடர்ந்து செய்து வர வேண்டும். இது மூளையின் செயல்பாட்டிற்கு உதவும்
ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள்
இந்த ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் மூளை கட்டமைப்பின் முக்கிய கூறுகளை உருவாக்குகிறது
புதிர் தீர்வு
புதிர் தீர்க்கும் மற்றும் டிகோடிங் புதிர்களில் ஈடுபட வேண்டும். இது அறிவாற்றை அதிகரிக்க உதவுகிறது. இது மூளையை சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது
படிப்பது
இது மூளையைத் தூண்டவும், புத்திசாலித்தனத்தை அதிகரிக்கவும் உதவும் பழக்கமாகும். இது பல மூளைப் பகுதிகளைப் பயன்படுத்துகிறது
தியானம்
தொடர்ந்து 10 நிமிடம் தியானம் செய்வது மூளையின் செறிவை அதிகரிப்பதுடன், ஞாபக சக்திக்கு உதவுகிறது
கிரீன் டீ
இந்த மூலிகை பானத்தை அருந்துவது மூளை செயல்பாட்டை மேம்படுத்துவதுடன், அறிவாற்றல் பணிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும்
சீரான தூக்க சுழற்சி
சரியான மற்றும் நல்ல தரமான தூக்கம் பெறுவதன் மூலம் கூடுதல் தகவல்களைச் சேமிக்கும் திறனை மேம்படுத்தலாம். இது சிறந்த அறிவாற்றலுக்கு உதவுகிறது
வழக்கமான உடற்பயிற்சி
நாள்தோறும் சுறுசுறுப்பாக இருக்க வழக்கமான உடற்பயிற்சி மேற்கொள்ளலாம். இது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. லேசான உடற்பயிற்சி ஹிப்போகாம்பஸை மேம்படுத்தி நினைவாற்றல் மேம்பாட்டிற்கு வழிவகுக்கிறது