உங்கள் பால்கனியில் விழும் காலை சூரிய ஒளியை எக்காரணம் கொண்டு மிஸ் செய்து விடாதீர்கள். அதிகாலை சூரிய ஒளி வைட்டமின் டி உற்பத்தியை ஊக்குவிக்கிறது மற்றும் உங்கள் செரோடோனின் அளவையும் அதிகரிக்கிறது, இது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகிறது. ஒரு நாளைக்கு 5 முதல் 30 நிமிடங்கள் வரை சூரிய ஒளியில் இருப்பது நல்லது.
கொழுப்பு மீன்கள்
அசைவ உணவு உண்பவர்கள் சால்மன், மத்தி மற்றும் கானாங்கெளுத்தி போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களைத் தேர்வு செய்யலாம், இவை வைட்டமின் டி இன் அற்புதமான ஆதாரமாகக் கருதப்படுகின்றன. வெறும் 99 கிராம் சமைத்த சால்மனில் சுமார் 600-1000 IU வைட்டமின் டி உள்ளது.
நீங்கள் சைவப்பிரியராக இருந்தால், வைட்டமின் டி உட்கொள்ளலை அதிகரிக்க காளான் ஒரு சிறந்த உணவு. காளான் மீது படும் வெயிலைக் கொண்டு அவை வைட்டமின் டி-யை உற்பத்தி செய்கின்றன. சில வகை காட்டு காளான்களில் 100 கிராமிற்கு 2,348 IU வரை வைட்டமின் டி உள்ளது.
செறிவூட்டப்பட்ட உணவுகள்
உங்கள் வைட்டமின் டி உட்கொள்ளலை அதிகரிக்க, நீங்கள் வைட்டமின் டி-செறிவூட்டப்பட்ட உணவுகளை வாங்கிப் பயன்படுத்தலாம். குறிப்பாக வைட்டமின் டி செறிவூட்டப்பட்ட பால் மிகவும் நல்லது.
டோஃபு, பனீர்
டோஃபு, பனீர் இரண்டும் வைட்டமின் டி-யின் சிறந்த ஆதாரமாகும். இதனைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கால்சியம், வைட்டமின் சி, பி12 மற்றும் வைட்டமின் ஏ மேம்படும்.