அன்றாடம் குளிப்பது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே. குளிக்கும் போது சிலர் நாரைப் பயன்படுத்தி தேய்த்து குளிப்பர். இதற்கு பிளாஸ்டிக் நார் பயன்படுத்துவதைத் தவிர்த்து தேங்காய் நாரைப் பயன்படுத்தலாம்
தேங்காய் நார்
கையில் தேய்த்துக் குளிப்பதற்கும், நார் கொண்டு தேய்த்துக் குளிப்பதற்கும் பல வித்தியாசங்கள் உள்ளன. இதில் குளிக்கும்போது தேங்காய் நாரைப் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்
சரும பொலிவு பெற
சருமத்திற்கு தேங்காய் நார் தேய்த்துக் குளிப்பது சருமத்தின் துளைகளை நீக்கி, சருமம் சுவாசம் பெற உதவுகிறது. இதன் காரணமாக, புதிய செல்கள் உருவாகி உடல் பொலிவு பெற உதவுகிறது
தசைகளின் இணைப்பை அதிகரிக்க
தேங்காய் நார் பயன்படுத்தி சருமத்தைத் தேய்த்துக் குளிப்பதன் மூலம் தசைகளின் இணைப்பைத் தூண்டி வளர்ச்சியை அதிகரிக்கலாம்
கிருமிகளை நீக்க
காற்று மாசுபாடு காரணமாக சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கிருமிகள் ஒட்டிக் கொண்டிருக்கும். நார் கொண்டு தேய்த்து குளிப்பதன் மூலம் சருமத்திலிருந்து கிருமிகளை எளிதாக நீக்க முடியும்
இரத்த ஓட்டத்தை மேம்படுத்த
உடல் முழுவதும் தேங்காய் நாரைப் பயன்படுத்தி தேய்த்து குளிப்பதன் மூலம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த முடியும்
மென்மையான சருமத்திற்கு
நார் பயன்படுத்தி குளிப்பது இயற்கையாகவே சருமம் மென்மைத் தன்மையை அடையும் எனக் கூறப்படுகிறது