மகிழ்ச்சியான, நிறைவான வாழ்க்கைக்கு தினமும் இத ஃபாலோ பண்ணுங்க

By Gowthami Subramani
25 Apr 2024, 17:30 IST

இன்றைய நவீன உலகில் மகிழ்ச்சியாக இருக்க உதவும் காரணங்களை கண்டறிய வேண்டியதாக உள்ளது. அன்றாட வாழ்வில் நாம் செய்யும் சில எளிய பழக்கங்கள் அதிக நினைவாற்றலையும், மகிழ்ச்சியையும் அடைய உதவுகிறது

நேர்மறையான நபர்களுடன் இருப்பது

நேர்மறையான நபர்களுடன் பழகுவது சிந்தனையை நல்ல வழியில் செலுத்தி ஆரோக்கியமான பழக்கங்களைத் தருகிறது. இந்த நேர்மறையான சூழல், மகிழ்ச்சியை மேம்படுத்துவதுடன், மன அழுத்தம், பதட்டத்தை நீக்குகிறது

நன்றியுணர்வு கொண்டிருத்தல்

நல்ல விஷயங்களைக் காண, அவற்றிற்கு நன்றியுணர்வுடன் இருக்க வேண்டும். இது உடனடியாக அமைதியாக மற்றும் மகிழ்ச்சியாக இருக்க வைக்கிறது

உணர்ச்சிகளை ஏற்றுக் கொள்வது

எந்த உணர்ச்சிகளையும் உணர்ந்து அதை ஏற்றுக் கொள்ள அனுமதிக்கும் போது, மகிழ்ச்சியைத் தருவதாக அமைகிறது. இந்த பயிற்சி மனதை அமைதியாக மற்றும் நிம்மதியாக வைக்க உதவுகிறது

ஆரோக்கியமான உணவுமுறை

நல்ல ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது நம்மை சுறுசுறுப்பாக வைப்பதுடன், கவனத்துடனும், மகிழ்ச்சியுடன் உணர உதவுகிறது

ஊடகங்களிலிருந்து விலகி இருப்பது

டிஜிட்டல் டிடாக்ஸ் என்பது சமூக ஊடகங்கள், தொழில்நுட்ப சாதங்களில் நாம் செலவிடும் நேரத்தைக் குறைப்பதாகும். இதிலிருந்து விலகி இருப்பது மன அழுத்தம், பதட்டத்தை உண்டாக்கும் கவனச்சிதறல்களைக் குறைக்கிறது

சுய பாதுகாப்பு

ஒவ்வொருவரும் தங்களுக்கென சிறிது நேரம் ஒதுக்க வேண்டும். இதில், அவர்களை மேம்படுத்த சுய கவனிப்புச் செயல்களில் ஈடுபடலாம்