உங்க வாழ்க்கையை மேம்படுத்த இந்த பழக்கங்களை ஃபாலோ பண்ணுங்க

By Gowthami Subramani
24 May 2024, 13:30 IST

வாழ்க்கை மேம்பாட்டிற்கு

இன்று பலரும் தங்களது வாழ்க்கையை மற்றவர்களின் வாழ்க்கையுடன் ஒப்பிட்டு விரக்தியான மற்றும் சோர்வான வழக்கத்தில் சிக்கிக் கொள்கின்றனர். வாழ்க்கையை மேம்படுத்த எளிய மற்றும் பயனுள்ள பழக்க வழக்கங்களை தினமும் கையாள வேண்டும்

தியானம்

காலை எழுந்தவுடன் தியானத்தில் ஈடுபடுவது மனத தெளிவுபடுத்தவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும், அந்த நாளில் புத்துணர்ச்சியுடனும் செயல்படவும் உதவுகிறது

தினநடவடிக்கைகளை எழுதுதல்

உறங்கும் முன் பகலில் சிறியது அல்லது பெரியது என எதுவாக இருப்பினும், அதை சிந்தித்துப் பார்க்கும் வகையில் நன்றி தெரிவித்து அவற்றை எழுத வேண்டும். இந்த நடைமுறை நேர்மறையான மனநிலை மற்றும் கண்ணோட்டத்தைத் தருகிறது

தினசரி வாசிப்பு

தினமும் குறைந்தது 20 பக்கங்களாவது படிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். சுய உதவி வழிகாட்டிகள், நாவல்கள், ஆன்மீக புத்தகங்கள் என பல்வேறு புத்தகங்களைத் தேர்வு செய்யலாம். இது படைப்பாற்றலை அதிகரிக்கவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது

சமூக ஊடகங்களைத் தவிர்ப்பது

காலை எழும் போதும் இரவு தூங்கும் போதும் சமூக ஊடகங்களைத் தவிர்ப்பது நல்லது. இதன் மூலம் நாளை சரியாகக் கொண்டு செல்ல முடியும்

ஆரோக்கியமான உணவு

உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். இது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் அமைகிறது

உடற்பயிற்சி

தினமும் காலையில் உடற்பயிற்சி மேற்கொள்வது உடலை வலுவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது. மேலும் இது நாள் முழுவதும் புத்துணர்ச்சியைத் தருகிறது

முன்கூட்டியே திட்டமிடுதல்

நாளை முன்கூட்டியே திட்டமிடுவதன் மூலம் வேலைகளைச் சரியான நேரத்தில் செய்து முடிக்க முடியும். அவசரப்படுத்துதலைத் தவிர்த்து சீக்கிரமாக வேலைகளைச் சரியாக செய்ய முடியும்

சுய பாதுகாப்பு

கவனம், அமைதி மற்றும் மன தெளிவு போன்றவற்றிற்கு சுயபாதுகாப்புக்கு முன்னுரிமை தர வேண்டும். எனவே துர்நாற்றம் கட்டுப்பாடு, சுத்தமான முடி மற்றும் நகங்கள், தொடர்ந்து பல் துலக்குதல் போன்றவற்றுடன் சுகாதாரத்தை பராமரிக்க வேண்டும்