செக்ஸ் வாழ்க்கைக்கும், மன ஆரோக்கியத்திற்கும் இடையே பல தொடர்புகள் உள்ளன. செக்ஸ் வாழ்க்கை, மன ஆரோக்கியத்தில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இங்கே.
ஹார்மோன்களின் வெளியீடு
உடலுறவு செயல்பாட்டின் போது, உடல் ஆக்ஸிடாஸின், டோபமைன் மற்றும் எண்டோர்பின் போன்றவற்றை வெளியேற்றுகிறது. இந்த ஹார்மோன்கள் மன அழுத்தத்தைக் குறைக்கவும், மனநிலையை மேம்படுத்தவும், இன்பம் மற்றும் தளர்வு உணர்வுகளை ஊக்குவிக்கவும் உதவும். ஆனால், இதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் அது மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும்.
நெருக்கம் உணர்வு
மற்றொரு நபருடன் பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடுவது நம்பிக்கை, பிணைப்பு மற்றும் உணர்ச்சிபூர்வமான நெருக்கம் ஆகியவற்றின் ஆழமான உணர்வுக்கு வழிவகுக்கும். ஆனால், நெருக்கம் ஏற்படுத்துவதில் சிரமத்தை சந்தித்தால், அது தங்களை குறைவாக சுயமதிப்பீடு செய்வது போல் உணர வைக்கும்.
திறமையின்மை உணர்வு
குறைந்த ஆண்மை, விறைப்புத்தன்மை அல்லது முன்கூட்டியே விந்து வெளியேறுதல் போன்ற பிரச்சினைகள் விரக்தி, சங்கடம் மற்றும் போதாமை போன்ற உணர்வுகளுக்கு வழிவகுக்கும். இந்த உணர்வுகள் மன அழுத்தம் மற்றும் பதட்டத்திற்கு வழிவகுக்கும்.
சங்கடமான நிலை
சில நபர்களுக்கு, பாலினத்தைச் சுற்றியுள்ள அழுத்தம் மற்றும் சமூக எதிர்பார்ப்பு ஆகியவை மன அழுத்தம் மற்றும் பதட்டத்திற்கு வழிவகுக்கும். மேலும் ஊடகங்கள் மற்றும் விளம்பரங்களில் வரும் யதார்த்தமற்ற சில செக்ஸ் காட்சிகளை, அது போல் நடந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கும் போது, அதில் போதாமை போன்ற எதிர்மறையான நிகழ்வுகள் ஏற்படும்.