மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்... இந்த 6 விஷயங்கள பாலோப் பண்ணுங்க!
By Kanimozhi Pannerselvam
05 Jan 2024, 15:25 IST
டான்ஸ்
நடனம் மூளையில் மகிழ்ச்சிக்கான ஹார்மோனை தூண்டுவது மற்றும் நெட்வொர்க்கிங்கை மேம்படுத்துகிறது, இது மன ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த உதவுகிறது.
கிக் பாக்ஸிங்
கிக் பாக்ஸிங் பயிற்சி மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைக்க ஒரு சக்திவாய்ந்த வழியாகும். இந்த பயிற்சியில் குத்துதல் மற்றும் உதைத்தல் ஆகியவை உடலை நெகிழ்வு தன்மையுடன் வைத்திருக்க உதவுகிறது.
கராத்தே மற்றும் ஜூடோ போன்ற தற்காப்புக் கலைகளைக் கற்றுக்கொள்வது மன அழுத்தம், விரக்தி, ஆற்றல் மற்றும் பதற்றம் ஆகியவற்றை விடுவிக்க சிறந்த வழியாகும்.
இயற்கையுடன் இணைவது
இயற்கை வெளிகளில் நடைப்பயிற்சி செய்வது அல்லது நடைபயணம் போன்ற உடலுக்கு மட்டுமல்ல மனதிற்கும் புத்துணர்ச்சியூட்டுகிறது. இயற்கையில் கிடைக்கும் புதிய காற்று மனதிற்கு புது உற்சாகத்தையும், ஊக்கத்தையும் அளிக்கிறது.
பைலேட்ஸ்
இது சகிப்புத்தன்மை, வலிமை மற்றும் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்க மற்றும் மன அழுத்தத்தை குறைக்க உதவும் ஒழுங்குபடுத்தப்பட்ட இயக்கங்கள் மற்றும் பாய் பயிற்சிகளை உள்ளடக்கியது.
யோகா
உங்கள் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சுவாசப் பயிற்சிகளின் வரிசையை உள்ளடக்கியதால், மன அழுத்தத்தை போக்க யோகா ஒரு சிறந்த வழியாகும்.