இன்று பெரும்பாலானோர் பதட்டம், மன அழுத்தம், மனச்சோர்வு மற்றும் நினைவாற்றல் இழப்பு போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். இந்த சூழ்நிலையில் சில பழக்கங்களைக் கையாள்வதன் மூலம் மூளை வளர்ச்சியை அதிகரிக்கலாம்
அதிகாலையில் எழுவது
அதிகாலையில் எழும் பழக்கம் சிறந்ததாகக் கருதப்படுகிறது. அதிகாலையில் எழுவதால் மனம் புத்துணர்ச்சி அடைவதுடன், நாள் முழுவதும் கவனத்துடன் இயங்க வைக்கிறது
தியானம்
காலை நேரத்தில் தியானம் செய்வது மனதை அமைதியாக வைத்திருக்க உதவுகிறது. இவை மன அழுத்தத்தைப் போக்கி, வேலையில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட வைக்கிறது
உடற்பயிற்சி செய்வது
காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வது மனதை புத்துணர்ச்சியடையச் செய்ய வைக்கிறது. இவை நாள் முழுவதும் உடலை சுறுசுறுப்பாக வைக்கவும், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது
வெயிலில் உட்காருவது
காலையில் சூரிய ஒளியில் உட்காருவது மிகவும் நன்மை பயக்கும். காலை நேரத்தில் சூரிய ஒளியில் அமர்வதால், உடலுக்குத் தேவையான வைட்டமின் டி சக்தியைப் பெறலாம்
நீரேற்றமாக இருப்பது
தினந்தோறும் காலையில் தண்ணீர் குடிப்பதால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி செரிமான ஆரோக்கியம் மேம்படும்
நேர்மறை எண்ணங்கள்
நாளைத் தொடங்கும் முன் அன்றைய நாளில் செய்யும் பணிகளைப் பட்டியலாகத் தயாரித்து வேலை முடிந்ததும் டிக் செய்யவும். இவ்வாறு செய்வது மனம் நேர்மறையாகவும், ரிலாக்ஸாகவும் வைத்திருக்கும்
சமூக ஊடகங்களைத் தவிர்ப்பது
பலரும் காலையில் எழுந்தவுடன் தொலைபேசியைப் பார்க்க விரும்புகின்றனர். ஆனால், இது மூளையைச் சோர்வடையச் செய்கிறது. எனவே காலையில் தொலைபேசி, மடிக்கணினி போன்றவற்றிலிருந்து விலகி இருப்பது நல்லது
இந்த பழக்க வழக்கங்களைக் கையாள்வதன் மூலம் மூளைத் திறனை மேம்படுத்துவதுடன், மூளையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது