புல்லில் வெறுங்காலுடன் நடப்பதில் இத்தனை நன்மைகளா?

By Gowthami Subramani
21 May 2024, 17:30 IST

நாள்தோறும் புல்லின் மீது வெறுங்காலுடன் நடப்பது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. இதில் புல்லின் மீது வெறுங்காலுடன் நடப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காணலாம்

இயற்கையோடு இணைப்பது

புல் மீது நடப்பது இயற்கை உலகத்துடன் இணைவதற்கான வாய்ப்பைத் தருகிறது. இது இயற்கையுடனான ஒற்றுமை உணர்வைத் தருவதுடன் மன நிறைவைத் தருகிறது

மேம்படுத்தப்பட்ட மனநிலை

புல் மீது வெறுங்காலுடன் நடப்பது மனதிற்கு புத்துணர்ச்சியைத் தருவதுடன், மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் உணர வைக்கிறது. இந்த செயல்முறையானது இயற்கையாக மனநிலையை மேம்படுத்தும் என்டோர்பின்களை வெளியிட உதவுகிறது

இரத்த அழுத்தத்தைக் குறைக்க

பூமியின் மேற்பரப்புடன் உடல் நேரடியாக தொடர்பு கொள்வது சர்க்காடியன் தளங்கள் மற்றும் தன்னியக்க நரம்பு மண்டலத்தை சீராக்க உதவுகிறது. இது இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது

வீக்கத்தைக் குறைக்க

புல் மீது வெறுங்காலுடன் இரண்டு மணி நேரம் நடப்பது உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும் இதய நோய், வகை 2 நீரிழிவு போன்ற அபாயங்களைத் தவிர்க்க உதவுகிறது

மேம்படுத்தப்பட்ட இரத்த ஓட்டம்

புல்லின் மீது வெறுங்காலுடன் நடப்பது, கால்களில் உள்ள நரம்பு முனைகளைத் தூண்டி சிறந்த இரத்த சுழற்சியை ஊக்குவிக்கிறது. இது உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது

வலி நிவாரணத்திற்கு

புல் மீது வெறுங்காலுடன் நடப்பதன் மூலம் நாள்பட்ட வலி அறிகுறிகளிலிருந்து நிவாரணம் பெறலாம். இது வலி, வீக்கம் மற்றும் அசௌகரியத்தைக் குறைக்க உதவுகிறது

சிறந்த தூக்கத்திற்கு

வெறுங்காலுடன் புல்லில் நடப்பது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவுகிறது. ஏனெனில், பூமியின் எலக்ட்ரான்களுடன் தொடர்பில் இருப்பது சர்க்காடியன் தாளத்தை ஒழுங்குபடுத்துவதுடன், தூக்க முறைகளை மேம்படுத்த உதவுகிறது