குளிர்காலத்தில் இந்த வைட்டமின் உங்களுக்குக் கட்டாயம் தேவை

By Gowthami Subramani
15 Dec 2024, 12:30 IST

குளிர்காலத்தில் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துக்களில் வைட்டமின் டி முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இதில் குளிர்காலத்தில் வைட்டமின் டி தரும் ஆரோக்கிய நன்மைகளைக் காணலாம்

நோயெதிர்ப்பு செயல்பாடு

வைட்டமின் டி உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது. குறைந்தளவு வைட்டமின் டி காரணமாக சுவாச நோய்த்தொற்றுகள் மற்றும் வேறு சில உடல்நல பாதிப்புகள் ஏற்படலாம்

எலும்பு ஆரோக்கியம்

வைட்டமின் டி ஊட்டச்சத்துக்கள், வலுவான மற்றும் ஆரோக்கியமான எலும்புகளை பராமரிக்க தேவையான கால்சியம் மற்றும் பாஸ்பரஸை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. மேலும் இது ஆஸ்டியோபொரோசிஸ் போன்ற நிலைமைகளைத் தடுக்க வழிவகுக்கிறது

தசை செயல்பாடு

தசை வலிமை மற்றும் செயல்பாட்டை பராமரிக்க வைட்டமின் டி முக்கியமானதாகும். குறைந்தளவு வைட்டமின் டி-யால் தசை பலவீனம், தசை வலி அபாயத்தை அதிகரிக்கலாம். குறிப்பாக வயதானவர்களுக்கு வைட்டமின் டி முக்கியமானதாகும்

இதய ஆரோக்கியம்

போதுமான அளவு வைட்டமின் டி இதய அமைப்பிற்கு ஒரு பாதுகாப்பான விளைவைத் தருகிறது. ஏனெனில், குறைந்தளவு வைட்டமின் டி இதய நோய், பக்கவாதம் மற்றும் உயர் இரத்த அழுத்த அபாயத்தை ஏற்படுத்தலாம்

மனநிலை கட்டுப்பாடு

சில ஆராய்ச்சிகளில் குறைந்த அளவு வைட்டமின் டி, பருவகால பாதிப்புக் கோளாறை ஏற்படுத்தலாம். குளிர்கால மாதங்களில் சூரிய ஒளி வெளிப்பாடு குறையும் போது இது ஏற்படுகிறது. போதுமான அளவு வைட்டமின் டி மனநிலையை சீராக்கவும், மனச்சோர்வு அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது

குறிப்பு

தனிப்பட்ட உடல்நலத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, உணவில் வைட்டமின் டி சேர்ப்பதற்கு முன் உணவியல் நிபுணரிடம் ஆலோசனை பெறுவது அவசியமாகும்