தினமும் நடனமாடுவது உடல் எடை குறைப்பு உட்பட பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. இதில் தினமும் 30 நிமிடம் நடனமாடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் சிலவற்றைக் காணலாம்
எடை மேலாண்மை
நடனம் ஆடுவது உடல் கலோரிகளை எரிக்கும் ஒரு செயலாகும். இது எடை இழப்பு அல்லது எடை பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் வழக்கமான நடனம் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், கலோரிகளை எரிக்கவும் உதவுகிறது
இதய ஆரோக்கியத்திற்கு
நடனம் ஆடுவது இதயத் துடிப்பை அதிகரித்து, இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இது உடல் முழுவதும் ஆக்ஸிஜன் ஓட்டத்தை அதிகரிக்கக் கூடிய ஒரு ஏரோபிக் பயிற்சியாகும். இது இதய அமைப்பை வலுப்படுத்தவும், இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது
தசை வலுவாக்கத்திற்கு
நடனம் பல தசைக் குழுக்களை ஈடுபடுத்துவதன் மூலம் தசை வலிமை மற்றும் சகிப்புத்தன்மையை மேம்படுத்துகிறது. வழக்கமான நடனம் வலுவான தசைகளை உருவாக்கவும், ஆரோக்கியமான எலும்பு அடர்த்தியை ஊக்குவிக்கவும் உதவுகிறது. இதன் மூலம் ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தைக் குறைக்கலாம்
அறிவாற்றல் மேம்பாட்டிற்கு
நடனத்தில் ஈடுபடும் உடல் செயல்பாடு, ஒருங்கிணைப்பு போன்றவை மூளையைத் தூண்டுகிறது. எனவே வழக்கமான நடனம் கவனம், நினைவாற்றல் மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்தலாம். மேலும், வயது தொடர்பான அறிவாற்றல் வீழ்ச்சியின் அபாயத்தைக் குறைக்கலாம்
நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்க்
நடனம் உடலின் நெகிழ்வுத்தன்மை மற்றும் சமநிலையை மேம்படுத்தும் வகையில் பல்வேறு வகையான அசைவுகளை உள்ளடக்கியதாகும். இந்த வழக்கமான நடனம் தசைகளை நீட்டவும், இயக்கத்தை மேம்படுத்தவும், காயம் ஏற்படுவதற்கான அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது
மன ஆரோக்கியத்திற்கு
நடனம் ஒரு மகிழ்ச்சியான செயலாகும். இதில் உள்ள உணர்ச்சி வெளிப்பாடு ஒட்டுமொத்த மன நலனை மேம்படுத்துகிறது. எனவே வழக்கமான நடனம் தனிமை உணர்வுகளை எதிர்த்துப் போராடவும், மகிழ்ச்சியை அதிகரிக்கவும், ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் உதவுகிறது