சம்மரில் குளிர்ந்த நீரில் குளிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

By Gowthami Subramani
01 Apr 2025, 18:07 IST

கோடை வெப்பம் அசௌகரியத்தைத் தரக்கூடியதாகும். இந்த நேரத்தில் சாதாரண நீரை விட ஐஸ் வாட்டரில் குளிப்பது பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இதில் கோடையில் ஐஸ் வாட்டரில் குளிப்பதால் கிடைக்கும் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்

வெப்பநிலையைக் குறைக்க

கோடைக்காலத்தில் ஐஸ் நீரில் குளிப்பதன் மூலம் உடல் வெப்பநிலையைக் குறைத்து வெப்பச் சோர்வைத் தவிர்க்க்கலாம். மேலும், இது உடலை புத்துணர்ச்சியடைச் செய்கிறது

தசை வலி நிவாரணத்திற்கு

நீண்ட நேரம் உட்கார்ந்த அல்லது உடற்பயிற்சிக்குப் பிறகு, தசை வலி, வீக்கம், சோர்வு போன்றவை ஏற்படலாம். இந்நிலையில், குளிர்ந்த நீர் குளியல் இந்த பிரச்சனைகளிலிருந்து விடுபட வைக்கிறது

சுழற்சியை அதிகரிக்க

குளிர்ந்த நீரில் குளிப்பது உடலில் இரத்த ஓட்டத்தைத் தூண்டுவதன் மூலம் சுழற்சியை ஊக்குவிக்கிறது. இது உடலுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை அனுமதிக்க வழிவகுக்கிறது

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க

ஐஸ் குளியல் செய்வது ஒரு நபரின் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இது உடலில் வெள்ளை இரத்த அணுக்களின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது

மன அழுத்தத்தைக் குறைக்க

ஐஸ் வாட்டர் குளியல் உடலில் மகிழ்ச்சி ஹார்மோன் ஆன எண்டோர்பின்களை வெளியிட உதவுகிறது. இது மனநிலையை மேம்படுத்தவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் வழிவகுக்கிறது

சரும ஆரோக்கியத்திற்கு

குளிர்ந்த நீர் குளியல் ஆனது சருமத்தின் துளைகளின் அளவு, எண்ணெய் பசை மற்றும் முகப்பரு வெடிப்புகளின் வாய்ப்பைக் குறைக்கிறது. கோடை காலத்தில் சருமத்திற்கு மிகவும் புத்துணர்ச்சியூட்டுகிறது

ஐஸ் வாட்டர் குளியல் செய்முறை

குளிக்க பயன்படுத்தும் பெரிய குளியல் டப்பாவில் குளிர்ந்த நீர் மற்றும் ஐஸ் நிரப்ப வேண்டும். இந்த தண்ணீரைப் பயன்படுத்தி குளிக்கலாம். எனினும், சில உடல்நலப் பிரச்சனைகளைக் கொண்டிருப்பவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது