சில ஆரோக்கியமற்ற பழக்கங்கள் இளம் வயதிலேயே முதுமை தோற்றம் பெற காரணமாகிறது. இதில் முதுமைத் தோற்றத்தைத் தூண்டும் பழக்க வழக்கங்களைக் காணலாம்
நீரிழப்பு
உடல் ஆரோக்கியத்திற்கு நீரேற்றம் அவசியமாகும். எனவே உடலில் நீரிழப்பு ஏற்பட்டால் முதுமையை விரைவுபடுத்தப்படுவதுடன், நாள்பட்ட நோய்களின் அபாயமும் ஏற்படலாம். எனவே உடலைப் பராமரிக்க தினமும் குறைந்தது 7-8 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்
உடற்பயிற்சியின்மை
வழக்கமான உடற்பயிற்சி உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. இதன் மூலம் சரும பொலிவை பெறலாம். மாறாக உடற்பயிற்சியின்மையால், உடல் பருமன், நீரிழிவு மற்றும் இதயம் தொடர்பான நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு
ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம்
ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தால், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போகிறது. இந்த மோசமான ஊட்டச்சத்து தோல் வயதை துரிதப்படுத்துகிறது. மேலும், சுருக்கங்கள் மற்றும் மந்தமான தன்மை போன்றவை ஏற்படலாம்
சூரிய வெளிப்பாடு
தொடர்ந்து சூரிய ஒளியில் வெளிப்படுதல் காரணமாக, அதன் புற ஊதா கதிர்கள் சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை பாதிக்கிறது. இது சரும சுருக்கங்கள் மற்றும் தொய்வுகளை ஏற்படுத்துகிறது. மேலும், இதன் நீண்ட நேரம் வெளிப்பாடு தோல் புற்றுநோயின் அபாயத்தை கணிசமாக அதிகரிக்கிறது
மன அழுத்தம்
இது வயதாவதற்கான ஒரு வேகமான வழியாகும். ஏனெனில், உடல் நல பாதிப்புகளை விட, மன அழுத்தம் சருமத்தை மங்கச் செய்யும் வீக்கத்தைத் தூண்டுகிறது. இதனால் சரும செல்கள் முன்கூட்டியே முதிர்ச்சியடையச் செய்கிறது. எனவே தினமும் யோகா, தியானம் போன்றவற்றில் ஈடுபடுவது நல்லது
மது அருந்துதல்
அதிகப்படியான மது அருந்துதல் காரணமாக சருமத்தில் நீரிழப்பு ஏற்பட்டு வீக்கம் உண்டாவதுடன் கொலாஜன் உற்பத்தியைக் குறைக்கலாம். இது முன்கூட்டிய சுருக்கங்கள், மந்தமான மற்றும் சீரற்ற தோல் தொனிக்குக் காரணமாகிறது
தூக்கமின்மை
போதுமான தூக்கமின்மையால் உடலின் இயற்கையான பழுதுபார்க்கும் செயல்முறைகளை சீர்குலைக்கப்பட்டு, சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை இழக்கச் செய்கிறது. மேலும் இது நச்சுகளை எதிர்த்துப் போராடும் உடலின் திறனை பலவீனப்படுத்துகிறது. எனவே தினந்தோறும் போதுமான தூக்கம் பெறுவது அவசியமாகும்