மியூசிக் கேட்பதால் இந்த மாதிரியான அற்புத நன்மைகள் கிடைக்குமா?

By Kanimozhi Pannerselvam
19 Jan 2024, 08:50 IST

மன அழுத்தத்தை போக்குகிறது

இசையைக் கேட்பது உயிர்வேதியியல் அழுத்தத்தைக் குறைப்பதன் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்கிறது என்று ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. மேலும் பிடித்தமான இசையை கேட்பது இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும் என்று கூறப்படுகிறது.

ஹார்மோன்களுக்கு நல்லது

மியூசிக் கேட்பது, இதயத் துடிப்பைக் குறைக்கும், இரத்த அழுத்தத்தைக் குறைக்கும், மன அழுத்த ஹார்மோனான கார்டிசோலின் அளவைக் குறைக்கும், மேலும் இரத்தத்தில் செரோடோனின் மற்றும் எண்டோர்பின் அளவை அதிகரிக்கும்.

மறக்கமுடியாத தருணங்களைத் தூண்டுகிறது

அல்சைமர் நோய் அல்லது டிமென்ஷியாவுக்கு எந்த சிகிச்சையும் இல்லை. ஆனால் அதன் சில அறிகுறிகளை இசை சிகிச்சையின் உதவியுடன் தணிக்க முடியும். இசை சிகிச்சையானது நோயாளியை ஆசுவாசப்படுத்தி, மனநிலையை மேம்படுத்தும்.

மனநிலையை மேம்படுத்துகிறது

பாடல்களைக் கேட்பது உங்கள் மனநிலையையும் மேம்படுத்துகிறது. இசையைக் கேட்பது மூளையில் டோபமைன் என்ற ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்கும்.

சாப்பாடு அளவை குறைக்க உதவுகிறது

பல்வேறு ஆய்வு முடிவுகளின் படி, மெல்லிசையுடன், மங்கலான வெளிச்சம் உள்ள இடத்தில் சாப்பிடும் போது, மக்கள் தங்கள் உணவை மெதுவாக உட்கொள்வது கண்டறியப்பட்டுள்ளது. அதன் விளைவாக மக்கள் சாப்பிடும் உணவின் அளவு குறைவதும் தெரியவந்துள்ளது.