மோசமான வாழ்க்கை முறையில் பெரும்பாலான ஆண்கள் விந்தணு ஆரோக்கியத்தைப் பற்றி யோசிப்பதில்லை. விந்தணு ஆரோக்கியத்திற்கு உதவும் உணவு வகைகளை பார்க்கலாம்.
காய்கறிகள் மற்றும் பழங்கள்
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கொண்ட பழங்கள் மற்றும் காய்கறிகள் விந்தணுக்களை செல்லுலார் சேதத்திலிருந்து பாதுகாக்கிறது. கருத்தரிப்பின் போது அவற்றின் வலிமை மற்றும் இயக்கத்தை பராமரிக்கிறது.
வைட்டமின்கள் ஈ, சி விந்தணுக்களின் எண்ணிக்கைக்கு முக்கியம். வைட்டமின் ஈ- வெண்ணெய், மாம்பழம், கீரை மற்றும் ப்ரோக்கோலி. வைட்டமின் சி- ஆரஞ்சு, அஸ்பாரகஸ், மாதுளை, தக்காளி, திராட்சைப்பழம்.
கொழுப்பு நிறைந்த மீன்
சால்மன், ஹெர்ரிங், மத்தி மற்றும் நெத்திலியில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அவை விந்தணுக்களின் கட்டமைப்பு மற்றும் உருவாக்கத்திற்கு அவசியமானவை.
நட்ஸ்
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், துத்தநாகம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ள வால்நட்ஸ், விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்கும்.
விதைகள் மற்றும் பூண்டு
பூசணி விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் துத்தநாகம் அதிகமாக உள்ளது. இது உங்கள் விந்தணுவின் தரத்தை மேம்படுத்தும். அதேபோல் பூண்டு சாப்பிடுவதும் மிகுந்த நன்மை பயக்கும்.