ஆண்கள் இந்த 6 சூப்பர் ஃபுட்களை தினமும் சாப்பிடனும் - ஏன்?

By Kanimozhi Pannerselvam
14 Jan 2024, 14:55 IST

ப்ரோக்கோலி

ஆண்களின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் பல்வேறு சூப்பர்ஃபுட்கள் இருந்தாலும், மிகவும் முக்கியமான ஒன்று ப்ரோக்கோலி. இதில் வைட்டமின்கள் சி, கே, மற்றும் ஏ மற்றும் நார்ச்சத்து போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகமுள்ளன.

சால்மன்

சால்மன் மிகவும் ஆரோக்கியமான ஒன்றாகும், இதில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நம்பமுடியாத அளவிற்கு நிறைந்துள்ளது. இதய ஆரோக்கியம் மற்றும் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

அவகேடோ

அவகேடோ பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களின் ஆரோக்கியத்திற்கும் முக்கியமானது என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இதில் அதிக அளவில் உள்ள மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு, கெட்ட கொழுப்பின் அளவைக் குறைப்பதோடு, இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.

காளான்

வைட்டமின் டி, செலினியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற ஊட்டச்சத்துக்களின் ஆதாரமாக விளங்கும் காளான், ஆரோக்கியம் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

தக்காளி

தக்காளி சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்தது. மேலும் இதிலுள்ள லைகோபீன், புரோஸ்டேட் புற்றுநோய் மற்றும் இருதய நோய் போன்ற நோய்களுக்கு எதிராக பாதுகாக்கிறது.

பிளாக் பீன்ஸ்

கருப்பு பீன்ஸில் உள்ள நார்ச்சத்து, புரதம் மற்றும் பைட்டோ கெமிக்கல்கள் இரத்தத்தில் குளுக்கோஸைக் கட்டுப்படுத்தவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.