உஷார்! ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் உணவுகள் இது தான்

By Gowthami Subramani
26 Jun 2024, 17:30 IST

ஆண்கள் சில தவறான உணவுகளை உட்கொள்வது மலட்டுத்தன்மையை அதிகரிக்கலாம். இந்த தவறான உணவுப்பழக்கம் உடலை நேரடியாகப் பாதிக்கலாம். ஆண்களின் மலட்டுத்தன்மையை அதிகரிக்கும் உணவுகளைக் காணலாம்

இனிப்பு பொருள்கள்

இனிப்பு பொருட்களை தொடர்ந்து உட்கொள்வது ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை அதிகரிக்கலாம். இது உடல் எடை குறைப்பு, நீரிழிவு நோய் மற்றும் இரத்த அழுத்த பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இது விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைப்பது மட்டுமில்லாமல் சில சமயங்களில் அவற்றின் தரமும் பாதிக்கப்படலாம்

பதப்படுத்தப்பட்ட இறைச்சி

பதப்படுத்தப்பட்ட இறைச்சி உட்கொள்ளல் உடலுக்குத் தீங்கு விளைவிக்கிறது. இது சுவையைத் தந்தாலும், ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை அதிகரிக்கிறது. மேலும் இது விந்தணுக்களின் எண்ணிக்கையும் குறைக்கிறது

புகைப்பிடிப்பதைத் தவிர்ப்பது

ஆண்களில் கருவுறாமை ஏற்படுவதற்கான முக்கிய காரணியாக இருப்பது புகைபிடித்தல் அமைகிறது. இது உடலுக்குத் தீங்கு விளைவிக்கலாம். மேலும் இது விந்தணுக்களைக் குறைப்பதுடன், அதன் தரத்தையும் குறைக்கிறது

அதிக சோடியம் உணவுகளைத் தவிர்ப்பது

சோடியம் அதிகம் உள்ள உணவுகள் ஆண்களின் மலட்டுத்தன்மையை அதிகரிக்கலாம். எனவே சோடியம் அதிகமுள்ள உணவுகளான நூடுல்ஸ், பர்கர், பீட்சா மற்றும் பாஸ்தா போன்றவற்றை உட்கொள்வதை முற்றிலும் குறைக்க வேண்டும்

மது அருந்துதலைத் தவிர்த்தல்

மது அருந்துவது ஆண்களின் மலட்டுத்தன்மையை நேரடியாக பாதிக்கலாம். இது விந்தணுக்களின் எண்ணிக்கையைக் குறைப்பதுடன் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தலாம். இது ஆண்களின் ஹார்மோன் அளவையும் சீர்குலைப்பதால் இவற்றைத் தவிர்க்க வேண்டும்