சுய இன்பம் உடல் நலத்திற்கு நல்லதா?

By Kanimozhi Pannerselvam
26 Jan 2024, 00:08 IST

மகிழ்ச்சி அதிகமாகும்

சுயஇன்பத்தின் காரணமாக டோபமைன் மற்றும் எண்டோர்பின் என்ற ஹார்மோன்கள் வெளியாகின்றன. இது உங்களை மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அதிகரிக்கிறது.

மன அழுத்தம்

சுயஇன்பம் மன அழுத்தத்தை குறைக்கிறது. உங்கள் செறிவை அதிகரிக்கிறது. மனதையும் அமைதிப்படுத்துகிறது.

உறக்கம்

சுயஇன்பத்திற்கு பிறகு மிகவும் சோர்வாக இருப்பீர்கள். இது நல்ல தூக்கத்தை தரும்.

மூளை சுறுசுறுப்பாகும்

டோபமைன் மற்றும் ஆக்ஸிடாஸின் போன்ற நல்ல நரம்பியல் இரசாயனங்களை வெளியிடுகிறது, அவை உங்கள் உற்சாகத்தை அதிகரிப்பதோடு, மூளையின் செயல்பாட்டையும் சுறுசுறுப்பாக்குகிறது.

நோயெதிர்ப்பு சக்தி

உடலுறவு அல்லது சுயஇன்பம் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். 2004ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் சுய இன்பத்திற்கு பிறகு உடலில் அதிக அளவில் வெள்ளை அணுக்கள் உற்பத்தியாவது கண்டறியப்பட்டுள்ளது.